நாட்டின் பொருளாதாரம் ஐந்தாண்டுகளில் உயரும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'நாட்டின் பொருளாதாரம் ஐந்தாண்டுகளில் உயரும்'

Added : பிப் 10, 2020
Share
 'நாட்டின் பொருளாதாரம் ஐந்தாண்டுகளில் உயரும்'

கோவை:கோவைபுதுாரிலுள்ள கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியின், 31வது பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவில், மத்திய அரசின்நிடி ஆயோக் கூடுதல் செயலர் ரமணன் பேசுகையில், ''நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஜி.டி.பி., இன்னும் ஐந்தாண்டுகளில் உலகம் வியக்கும் அளவிற்கு உயரும். தொழில்நுட்ப வளர்ச்சி, பல புதுமை படைப்புகளை எதிர்காலத்தில் படைக்க உள்ளது.இளைஞர்களின் திறமையை கண்டறிந்து, அதை ஆசிரியர்கள் பயனுள்ளதாக மாற்ற வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, முனைவராக தேர்வு பெற்ற ஐந்து பேர் உள்பட, இளங்கலை, மற்றும் முதுகலை பிரிவுகளை சேர்ந்த, 1,108 பேருக்கு பட்ட சான்றிதழை வழங்கினார்.விழாவுக்கு, கிருஷ்ணா கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி தலைமை வகித்தார். பெங்களூரு, ஆல்டரான் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக மேலாண்மை தலைவர் மாத்துார் பரமேஸ்வரன், கிருஷ்ணா கல்வி குழும முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன், முதல்வர் சீனிவாச ஆளவந்தார், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X