சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புகையிலை விற்றவர் கைது

Added : பிப் 10, 2020
Advertisement

தேனி:தேனி சிவாஜிநகர் 2வது தெரு ராமகிருஷ்ணன் 60. இவர், இங்குள்ள தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 13 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். தேனி போலீஸ் அல்போன்ஸ்ராஜா எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தார். ரூ.2,600 மதிப்புள்ள 13 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மாணவி காயம்

வீரபாண்டி:முத்துத்தேவன்பட்டி முருகன் கோயில் தெருவை சேர்ந்த கிருஷ்ணவேனி 15.
இவர் தேனியில் அரசு உதவி பெறும் பெண்கள மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். முத்துத்தேவன்பட்டி தனியார் ஏஜன்சி கடை அருகே நடந்து சென்றபோது வருஷநாடு காந்திபுரம் பிரபு, ஓட்டிவந்த டூவீலர் மாணவி மீது மோதியது. இதில் மாணவி காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கார் விபத்து இருவர் காயம்

தேனி:சுக்குவாடன்பட்டி ஜெயம்நகர் அன்பழகன் 64. பீகார்,கிழக்கு சாம்புரன் ஜமிலியாவை சேர்ந்த சிவிலால் பன்சில் மகன் சனோஜ்மன்சில் 16. இருவரும் தனியார் பருப்பு மில்லில் பணி முடிந்து. பிப்.,8ல் இரவில் அன்னஞ்சி பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஆவின் கடைக்கு நடந்து
வந்தனர். அப்போது தேனி- பெரியகுளம் ரோட்டில் சென்ற ராமநாதபுரம், கிருஷ்ணசாமிநகரைச் சேர்ந்த சிவக்குமார் 47, ஓட்டிவந்த கார் இருவர் மீது மோதியது. இதில் இருவரும் காயம் அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X