பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி விளையாட்டு போட்டி கோலாகலம்

Added : பிப் 10, 2020
Share
Advertisement
 எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி விளையாட்டு போட்டி கோலாகலம்

சென்னை:எம்.ஓ.பி., வைஷ்ணவா பெண்கள் கல்லுாரி விளையாட்டு போட்டியில், அக்கவுன்டிங் மற்றும் நிதித்துறை அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
நுங்கம்பாக்கம், எம்.ஓ.பி., வைஷ்ணவா பெண்கள் கல்லுாரியின் விளையாட்டு ஆண்டு விழா, சேத்துப்பட்டு, பல்கலைக்கழக யூனியன் மைதானத்தில், சமீபத்தில் நடந்தது. அந்த கல்லுாரியில் நடந்த விளையாட்டு போட்டியில், 19 துறைகளைச் சேர்ந்த மாணவியர் பங்கேற்றனர்.இதில், ஓட்டப்பந்தயம், 100 மற்றும் 200 மீ., பிரிவில், ஹர்ஷிதா; 400 மீ., பிரிவில், ஸ்ருதிலேகா ஆகியோர் முதலிடம் பெற்றனர். 4*100 மீ, ரிலே பிரிவில், பி.எஸ்சி., கணித அணி முதலிடம் பிடித்தது.இந்த போட்டியில், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை, பி.காம்., அக்கவுண்டிங் மற்றும் நிதித்துறை - பிரிவு 1 அணி கைப்பற்றியது. இதில், வெற்றி பெற்ற மாணவியருக்கு, தமிழக அரசின் ஓய்வு பெற்ற கூடுதல் தலைமை செயலர் டேவிதார் மற்றும் இளம் சதுரங்க கிராண்ட் மாஸ்டர் பிரக்னானந்தா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X