குப்பை குவிந்து கிடக்கிறது; மாநகராட்சி பகுதியில் சுகாதாரம் 'சுத்தமாக' இல்லை

Added : பிப் 10, 2020
Advertisement
 குப்பை குவிந்து கிடக்கிறது; மாநகராட்சி பகுதியில் சுகாதாரம் 'சுத்தமாக' இல்லை

குப்பை அள்ளுவதில்லைராஜவீதி - இடையர்வீதி சந்திப்பில், குவியும் குப்பை நாள்கணக்கில் அள்ளப்படுவதில்லை; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.-ரமேஷ் பாபு. இடையர்வீதி.

காத்திருக்கும் விபத்துமேட்டுப்பாளையம் ஏ.ராமசாமி நாயுடு பள்ளிஎதிரில், சாலையிலுள்ள குழியை மறைக்க கான்கிரீட் வைக்கப்பட்டுள்ளது.பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் வைத்தால் விபத்துக்களை தடுக்கலாம்.--ஹரிஹரன், துடியலுார்.

குடிநீர் வீண்பெரியநாயக்கன்பாளை யத்தை அடுத்த ஜோதிபுரத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.-ரஞ்சித்குமார்,

ஜோதிபுரம்

குப்பைக்குவியல்பாப்பநாயக்கன்பாளையம் லட்சுமி மில் காலனி அருகே, குப்பை அள்ளப்படாமல் சாலையில் சிதறிக்கிடக்கின்றன. மாநகராட்சிப்பணியாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும்.-ஹரிபுகழ், பாப்பநாயக்கன்பாளையம்.

மோசமான சாலைஆவாரம்பாளையம் சி.எம்.திருமண மண்டபம் செல்லும் சாலையில், ரயில்வே லைனுக்கு கீழே செல்லும் சாலை, மிக மோசமாக உள்ளது.-செந்தில்குமார், ஆவாரம்பாளையம்.

குப்பைமலைகோவை மாநகராட்சி, 47வது வார்டு, கணபதி புதுார் பாலன் நகர் பகுதியில் பல நாட்களாக, குப்பை அள்ளப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது.-சண்முகம்

கணபதிபுதுார்.

குழியால் அவதிபோத்தனுார் ராமானுஜ நாயுடு வீதியில், குடிநீர் குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட குழி அப்படியே விடப்பட்டுள்ளது. மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.-கனகராஜ், போத்தனுார்.

அறுந்தது ஊஞ்சல்காந்திபார்க் அருகே உள்ள பொன்னையராஜபுரம் செம்மொழிப்பூங்காவில், ஊஞ்சல் சங்கிலி துருப்பிடித்து அறுந்து கிடப்பதால், பூங்காவுக்கு வருவோர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.-ராஜேந்திரன், காந்திபார்க்.

பஸ் ஸ்டாப் வேண்டும்மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தொட்ட தாசனுார் கிராமத்திற்கு பஸ் நிறுத்தம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.-அருண்,

தொட்டதாசனுார்.

வழித்தடத்தில் குப்பைத்தொட்டிராமநாதபுரம் ஒலம்பஸ் 80 அடி சாலையிலுள்ள குப்பைத்தொட்டியை, வாகனங்கள் செல்லும் வழித்தடத்திலேயே விட்டுச்செல்வதால் விபத்து ஏற்படுகிறது.-கிருஷ்லிக், ராமநாதபுரம்.

அரைகுறை சாலைப்பணிபீளமேடு பி.கே.டி. நகர் முதல் தெருவில் சாலைப்பணி, அரைகுறையாக போடப்பட்டுள்ளது.-செல்வநாராயணன், பீளமேடு

இங்கு டெங்கு உண்டுசெல்வபுரம் எல்.ஐ, சி.,காலனி மற்றும் சி.ஜி.வி.நகரில், நிறைய பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மாநகராட்சி கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.-பாண்டியன், செல்வபுரம்.

அள்ளாத குப்பைபீளமேட்டிலிருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில், கோபால் நகர் தபால் அலுவலகம் அருகே, குப்பை அள்ளப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது.-துரை, கோபால் நகர்.

குழியான சாலைதொண்டாமுத்துாரிலிருந்து அஜ்ஜனுார் வழியாக காயத்ரி கோவில் செல்லும் சாலை, மிகவும் மோசமடைந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளது.-ஜெயராமன்,

காயத்ரி நகர்.

குடிநீர் வீண்புலியகுளம் பிரதான சாலையிலுள்ள பிள்ளையார் கோவில் அருகே வடபகுதியில், பில்லுார் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.-செல்வா, புலியகுளம்.

சாலையை சீரமைக்கலாம்சவுரிபாளையத்திலிருந்து உப்பிலிபாளையம் செல்லும் பாதையில் எப்போதும் புழுதி பறக்கிறது. இச்சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.-லோகநாதன் மருதாசலம், சவுரிபாளையம்

வீணாகும் குடிநீர்மாநகராட்சி, 32வது வார்டுக்குட்பட்ட, சேரன் மாநகர், நான்காவது பஸ் ஸ்டாப்புக்கு தெற்கே, குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.-ரவிசங்கர், விளாங்குறிச்சி.

சாலை அமைக்கப் படவில்லைதமிழ்நாடு வேளாண் பல்கலை நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் அங்குள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் மூங்கத்துார் சாலை செப்பனிட, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் சாலை அமைக்கப்படவில்லை.-ஜெயமணி, மூங்கத்துார்.

ஆன்லைன் ஆப்சென்ட்சொத்துவரி கட்டாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்குகிறது மாநகராட்சி நிர்வாகம். ஆனால், ஆன்லைனில் வரி செலுத்த முடிவதில்லை. ஆன்லைனில் செலுத்த எளிமைப்படுத்த வேண்டும்.-ரங்கநாதன், சந்திரகாந்தி நகர்.

கொசுத் தொல்லைமக்கள் அவதிபீளமேட்டிலிருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலை, விக்னேஷ் நகரில், கொசுக்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மாநகராட்சி கொசுமருந்து அடித்தால் அப்பகுதி மக்கள் நிம்மதியாக இருக்கலாம்.விக்னேஷ்,

விளாங்குறிச்சி சாலை

தேங்கும் சாக்கடை கழிவுபீளமேட்டிலுள்ள சிங்காநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., கார்த்திக் அலுவலகம் அருகே தோண்டப்பட்டு, பல நாட்களாக விடப்பட்ட சாக்கடை கால்வாயிலிருந்து, துர்நாற்றம் வெளியேறுகிறது.-செந்தில்நாதன்,

பீளமேடு

கொசு மருந்து அடிங்க ப்ளீஸ்கோவை மாநகராட்சி 15வது வார்டு, பாப்பநாயக்கன்புதுாரில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, உள்ள அனைத்து வீதிகளுக்கும், ஸ்பிரே அல்லது மின்மோட்டார் கொண்டு, கொசு மருந்து அடிக்க வேண்டும்.-சந்திரன், பாப்ப நாயக்கன்புதுார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X