பொது செய்தி

தமிழ்நாடு

பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்

Added : பிப் 10, 2020
Advertisement

மதுக்கரை:மதுக்கரை மார்க்கெட் பகுதியிலுள்ள, பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூச விழாநடந்தது.கோவிலின், 45ம் ஆண்டு தைப்பூச விழா, 3ல் கணபதி வேள்வியுடன் துவங்கியது. தொடர்ந்து வந்த மூன்று நாட்கள், தினமும் பக்தர்கள் ஆறுமுக காவடியுடன் நகர் வலம் வந்தனர். 7ல் திருவிளக்கு பூஜை நடந்தது.நேற்று முன்தினம் தைப்பூசம் முன்னிட்டு, கணபதி பூஜை, காவடி முத்தரிப்பு, அலங்கார பூஜை, தீபாராதனை உள்ளிட்டவை நடந்தன.மாலையில், மேட்டாங்காடு விநாயகர் கோவிலிலிருந்து முருகர் மயில் வாகன ரதத்தில், திருவீதி உலா வந்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.நேற்று இரவு, முருக பக்தர்கள் பழநிக்கு பாத யாத்திரை புறப்பட்டனர். இன்று மாலை, மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X