தேசிய, 'டி-20' கிரிக்கெட் 'லீக்' போட்டியில், பச்சையப்பன் அணி வெற்றி

Added : பிப் 10, 2020
Advertisement

சென்னை:தேசிய அளவில் கல்லுாரிகளுக்கு இடையிலான, 'டி-20' கிரிக்கெட் 'லீக்' போட்டியில், பச்சையப்பன் அணி வெற்றி பெற்றது.
தேசிய அளவில், கல்லுாரிகளுக்கு இடையிலான, 'டி-20' கிரிக்கெட் போட்டி, 6ம் தேதி துவங்கியது. இந்த போட்டியானது, குருநானக், பச்சையப்பன் உள்ளிட்ட சில கல்லுாரி மைதானங்களில் நடந்து வருகிறது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, ஆண்கள் பிரிவில், - 20; பெண்கள் பிரிவில், - 12 கல்லுாரிகள் பங்கேற்றுள்ளன. இதில், சமீபத்தில் குருநானக் கல்லுாரி மைதானத்தில் நடந்த, 'லீக்' போட்டியில், சென்னை, லயோலா மற்றும் ஈரோடு, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அணிகள் மோதின.'டாஸ்' வென்ற, லயோலா அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. குறிப்பிட்ட, 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு, 167 ரன்கள் குவித்தது.அடுத்து களமிறங்கிய, கொங்கு அணியார், 9 விக்கெட் இழப்பிற்கு, 105 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.பச்சைப்பன் கல்லுாரி மைதானத்தில் நடந்த மற்றொரு, 'லீக்' போட்டியில், சென்னை பச்சையப்பன் மற்றும் நாமக்கல், கே.எஸ்.ரங்கசாமி கல்லுாரி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்த பச்சையப்பன் கல்லுாரி அணி, 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்பிற்கு, 147 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் கண்ட, கே.எஸ்.ரங்கசாமி கல்லுாரி அணி, 8 விக்கெட்டுளை இழந்து, 139 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X