பொது செய்தி

தமிழ்நாடு

இந்த வாரம்...ஆரவாரம் !

Added : பிப் 10, 2020
Advertisement

பிப்.,10: பிரம்ம சூத்திரம்மதச்சார்பற்ற பிரம்ம சூத்திரம், கைக்குள் அகப்படுத்தப்பட்ட கடல் என ஆதிசங்கரர் புகழ்கிறார். பிரம்ம சூத்திரம் குறித்து ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில் சிறப்பு சொற்பொழிவு, காலை, 10:00 மணி முதல் நடக்கிறது.

பிப்.,10: இலவச மருத்துவ முகாம்எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை கல்லுாரியின், வணிக நிர்வாகவியல் துறை சார்பில், இலவச கண், பல் மற்றும் மகளிர் உடல் நல மேம்பாட்டு முகாம் நடக்கிறது. இரண்டு நாள் முகாமில், கண்ணில் புரை உண்டாகுதல், மாறுகண், கிட்டப்பார்வை, துாரப்பார்வை, மாலை கண் நோய், நீர் அழுத்த நோய்கள் இலவசமாக பரிசோதிக்கப்படும். காலை, 10:00 முதல், மாலை, 4:00 மணி வரை முகாம் நடக்கிறது.

பிப்.,11: சாக்லேட் தயாரிப்புசங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின், கேட்டரிங் அறிவியல் மற்றும் ஓட்டல் மேலாண்மை துறை சார்பில், தேசிய அளவிலான ' சாக்லெட் டெசர்ட்ஸ் மற்றும் டெக்கரேஷன்' குறித்த பயிலரங்கு நடக்கிறது. காலை, 9:30 முதல், மாலை, 4:00 மணி வரை நடக்கும் பயிற்சியில், கலந்துகொள்ள முன்பதிவு செய்வது அவசியம்.

பிப்.,11: நவநாகரிக கண்காட்சிபெண்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, நவநாகரிக ஆடை அணிகலன்களை உள்ளடக்கிய 'பனாச்சி' கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. வரும் 12ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியை, காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.

பிப்.,16: பகவத்கீதைசெருக்கும் மயக்கமும் அற்றவர்கள், ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிலைத்து நிற்பவர்கள் என போதிக்கும் பகவத்கீதை, வாழ்வை ஆராதித்து வாழ கற்றுத்தருகிறது. சீரடி சாய்பாபா துவாரகமாயி கோவிலில், பகவத்கீதை சொற்பொழிவு மாலை: 6:00 மணிக்கு நடக்கிறது.

பிப்.,16: குட்டீசுக்கு பிடித்த குக்கீஸ்முட்டை சைவமா, அசைவமா என்ற ஆராய்ச்சியை விடுங்கள். முட்டையில்லாமலும் குட்டீஸ்க்கு பிடித்த பேக்கரி உணவுகள் செய்யலாம். கேக் மைடே சார்பில், முட்டையில்லாமல், பீனட் பட்டரில் குக்கீஸ் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை, 10:30 முதல், மாலை, 3:30 மணி வரை நடக்கும் பயிற்சியில் கலந்துகொள்ள, முன்பதிவு செய்வது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X