பொது செய்தி

தமிழ்நாடு

'பழைய வாழ்க்கை முறை போனது 45 வயதிலேயே முதுமை வந்தது'

Added : பிப் 10, 2020
Advertisement

கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் இயக்குனர் சதாசிவம் எழுதிய 'போதி மரத்தடியில்' நுால் வெளியீட்டு விழா, ஆரூத்ரா ஹாலில் நேற்று நடந்தது.ஆரோக்கியா சித்த மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் சிவராமன் நுாலைவெளியிட்டு பேசியதாவது:முதியவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது. வாழ்க்கைக்கு தேவையான பல தகவல்களை, நுாலாசிரியர் இந்நுாலில் தந்திருக்கிறார். முன்பெல்லாம், 60 வயதில் முதுமை வந்தது. இன்றைக்கு, 45 வயதிலேயே வந்து விடுகிறது.இதற்கு காரணம், பழைய வாழ்க்கை முறையை நாம் இழந்து விட்டோம். கூட்டுக் குடும்ப வாழ்க்கை இன்றைக்கு இல்லை. உற்றார் உறவினர்கள் அருகில் இல்லை. முதுமை காலத்தை சொந்தங்களோடு சேர்ந்து, இனிமையாக கழிக்க வேண்டும். ஆனால் இங்கு பெரும்பாலும், முதியவர்கள் தனிமையில் இருக்கின்றனர். முதுமையில் தனிமை நோயாக மாறும். வெளிநாடுகளில் முதுமையை கொண்டாடுகின்றனர். மனிதர்களுக்கு மன நிம்மதி முக்கியம். ஆரோக்கியம் மகிழ்ச்சியில்தான் இருக்கிறது.இவ்வாறு, அவர் பேசினார்.கேரளா திருச்சூர் வேளாண் பல்கலை துணைவேந்தர் சந்திரபாபு, ஏ.வி.குழுமம் தலைவர் வரதராஜன், நன்னெறிக்கழக தலைவர் இயகோகா சுப்ரமணியம், பேராசிரியர் ஜெகதீசன், கிருஷ்ணா ஸவீட்ஸ் கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X