பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்டில் பரிதாபம்!

Added : பிப் 10, 2020
Advertisement

விரிவாக்க திட்டம் கிடப்பில் போடப்பட்டதால்...பஸ்களை நிறுத்த இடமின்றி தொடரும் நெரிசல் உடுமலை, பிப். 10-பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திட்டம், 20 ஆண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டு, தற்போதுள்ள இடமும், ஆக்கிரமிக்கப்பட்டு சுருங்கி வருவதால், பஸ்கள் வந்து செல்லவே திணற வேண்டியுள்ளது; பயணிகள் நிலை பரிதாபமாகியுள்ளது.கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, உடுமலை பஸ் ஸ்டாண்ட், 1964ல் கட்டப்பட்டது; அதற்கு பிறகு, 1996ல் விரிவாக்கம் செய்யப்பட்டது.உடுமலை சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, நகர பஸ்களும், மதுரை, கோவை, திண்டுக்கல், பழநி என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புறநகர் பஸ்களும் வந்து செல்கின்றன. பஸ் ஸ்டாண்டிற்குள், தினமும், 400 பஸ்கள், 1,500 முறைக்கு மேல் வந்து செல்கின்றன.தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில், பஸ்கள் நிற்பதற்கான, 'ரேக்' வசதி மற்றும் பயணிகள் காத்திருப்பதற்கான இருக்கை வசதி என அடிப்படை வசதிகள் இல்லை. பஸ் ஸ்டாண்ட், குறுகியதாக உள்ளதோடு, ஐந்து நுழைவாயில்கள் உள்ளதால், பஸ்கள் எளிதாக வந்து திரும்பிச்செல்ல முடியாத சூழலும், நெரிசல் மிகுந்ததாகவும் உள்ளது.அதிகரித்து வரும் பஸ்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கையை சமாளிக்கும் வகையில், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது.இதற்காக, பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்த, வி.பி.,புரத்தில், 420 ஆக்கிரமிப்பு வீடுகள், 10 ஆண்டுக்கு முன் அகற்றப்பட்டது. ஆனால், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யப்படவில்லை.மீட்கப்பட்ட நிலம், தனியார் வாகனங்கள், பொக்லைன் வாகனங்கள், நிறுத்தப்படும் இடமாக மாறியுள்ளது. தற்காலிக கடைகள், என, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், நகராட்சி நிர்வாகம் சார்பில், நகர ஊரமைப்புத்துறையிடமிருந்து, விரிவாக்கத்திற்கான அனுமதி பெறப்பட்டது. பின்னர், எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.நெரிசலால் தவிப்புதொலைதுார பஸ்கள் நிறுத்துவதற்கு பஸ் ஸ்டாண்டில் போதிய இடவசதியில்லை. பொள்ளாச்சி வழித்தடத்தில் செல்லும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேற இடமில்லாமல், திணற வேண்டியுள்ளது. திருப்பூர் வழித்தட பஸ்கள், ரேக்கில் இருந்து ரிவர்ஸ் வரும் போது, பை-பாஸ் ரோட்டில் வரும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டுக்குள் வர முடியாது.பஸ் ஸ்டாண்டில் நகராட்சி கடைகளை வாடகைக்கு எடுத்துள்ளவர்கள், மேற்கொள்ளும் தற்காலிக ஆக்கிரமிப்புகள்; தள்ளுவண்டி கடைகளால், நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. நகரின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் அளவுகோலாக வெளியூர் பயணிகள், கருதும், பஸ் ஸ்டாண்டின் நிலை தொடர்ந்து, பரிதாபமாகி வருவது உடுமலை மக்களை கவலையடைய செய்துள்ளது.பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்துக்காக, தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதி அளித்தவர்களும், வெற்றி பெற்றவர்களும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலை நீடித்தால், பஸ் ஸ்டாண்டுக்கும் வராமல், பஸ்கள், தேசிய நெடுஞ்சாலையிலேயே நின்று செல்லும் நிலை உருவாகும் அபாயம் உள்ளது. அதற்குள், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என உடுமலை பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X