பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் கழிவுகளால் 'கலங்கும்' திருமூர்த்திமலை! சூழலை மீட்க துறைகள் ஒருங்கிணைப்பு தேவை

Added : பிப் 10, 2020
Advertisement

உடுமலை;சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த திருமூர்த்திமலையில், பிளாஸ்டிக் கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், குடிநீரும் மாசடையும் நிலை ஏற்பட்டும், எத்துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை.உடுமலை அருகே திருமூர்த்திமலை ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது. அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், மலையில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை அழகை ரசிக்க, அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.திருமூர்த்திமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி விட்டு, அனைத்து பகுதிகளிலும் வீசுகின்றனர். பஞ்சலிங்க அருவியில் குளிப்பவர்கள், அணைக்கு செல்லும் தண்ணீரில், பாலித்தீன் கவர்களை வீசி விடுகின்றனர். மலையடிவாரத்தில் கோவில் அருகில், பழைய துணிகளை, ஆற்றில், விடுகின்றனர். இதே போல், அணை படகுத்துறை அருகே, சுற்றுலா பயணிகள், இளைப்பாறி விட்டு, பிளாஸ்டிக் பாட்டில்களையும், இதரக்கழிவுகளையும், அங்குள்ள யுகலிப்டஸ் மரங்கள் அடர்ந்த பகுதியில், வீசுகின்றனர்.குடிநீருக்கும் ஆபத்துஉடுமலை நகராட்சி மற்றும் 150க்கும் அதிகமான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக, திருமூர்த்தி அணை உள்ளது. அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகளும் தாகம் தீர்க்க அணைக்கு வந்து செல்கின்றன.திருமூர்த்திமலையின் பல்வேறு பகுதிகளில், வீசப்படும் கழிவுகள் அனைத்தும், அணை நீரில் சேர்கின்றன. மக்கும், மக்காத கழிவுகள் தொடர்ந்து அணையில் சேர்வதால், குடிநீரான, அணை நீர் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.திருமூர்த்திமலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில், விடுமுறை நாட்களில் துாய்மைப்பணி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு முறையும், டன் கணக்கில், பிளாஸ்டிக் கழிவுகளும், பழைய துணிகளும், சேகரிக்கப்பட்டு, தளி பேரூராட்சி துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.கோவில் நிர்வாகம் சார்பில், ஆற்றில் பழைய துணிகளை விட, தடை விதிக்கப்பட்டு, அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டு, கண்காணிப்புக்கு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வது குறையவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வாக, தளி பேரூராட்சி, இந்து அறநிலையத்துறை, வனத்துறை சார்பில், கண்காணிப்புக்குழு அமைக்கப்பட வேண்டும்.இத்தகைய பணிகளை தீவிரப்படுத்தினால், கழிவுகளால் பாழாகும் திருமூர்த்திமலையின் இயற்கை சூழலை மீண்டும் மீட்டெடுக்க முடியும். இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X