நகரில் 'லொள்' தொல்லை அதிகரிப்பு: மக்கள் நடந்து செல்ல முடியாமல் தவிப்பு

Added : பிப் 10, 2020
Advertisement

உடுமலை;உடுமலை நகராட்சியில் 'லொள்', அட்டகாசம் அதிகரித்து வருவதால், மக்கள் நிம்மதியாக ரோட்டில் செல்ல முடியாமல் பீதியாகியுள்ளனர்.உடுமலை நகரவீதிகளில், தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர். நகராட்சி சுகாதாரத்துறையின் சார்பில், நாய்களின் அட்டகாசத்தை கட்டுபடுத்த, 'நாய் பயண வாகனம்', பயன்படுத்தப்பட்டது.தற்போது, அந்த வாகனமும் எந்த பயன்பாடில்லாமல், நகராட்சி அலுவலகத்தில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது. ஆண்டாள் சீனிவாசன் லே-அவுட், வாசவி நகர், நேரு வீதி, ஜீவா நகர், பழனியாண்டவர் நகர், ராமசாமி நகர், என குடியிருப்புகளில், தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தெருநாய்கள், ரோட்டில் நடப்போரை, அச்சுறுத்துவதும், குழந்தைகளை கடிக்க செல்வதாலும், மக்கள் எந்நேரமும் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. வாகன ஓட்டிகளை துரத்தி விபத்துக்குள்ளாவதால் இரவு நேரத்தில் பணி முடித்து வருவோர், இதனால் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.குழந்தைகளை வீதிகளில் விளையாட விடவும் பெற்றோர் அச்சப்படுகின்றனர். நகராட்சி சுகாதாரத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், மக்கள் வேதனையடைந்துள்ளனர்.தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X