ஆடுகளை வேட்டையாடிய செந்நாய்கள்: விவசாயிகள் கடும் அதிர்ச்சி

Added : பிப் 10, 2020
Advertisement

உடுமலை:உடுமலை அருகே, செந்நாய்கள் கூட்டம், ஆடுகளை வேட்டையாடிய சம்பவம் விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராாமங்களில், கடந்த சில நாட்களாக, வனவிலங்குகளால், விளைநிலங்களில் பல்வேறு சேதம் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், வல்லக்குண்டாபுரம் பகுதியில், தென்னந்தோப்பில், ஆடுகள் அடைத்து வைக்கும் பட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியில், நேற்றுமுன்தினம், 7 ஆடுகள், இறந்துகிடந்தன. அதிர்ச்சியடைந்த ஆடு வளர்ப்போர், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.உடுமலை வனச்சரக அலுவலர் தனபாலன் தலைமையில் குழுவினர் சம்பவ இடத்தில், ஆய்வு செய்தனர். அதில், செந்நாய்கள் கடித்து, ஆடுகள் காயமடைந்து இறந்தது தெரியவந்தது. இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் பெற்றுத்தரப்படும் என அலுவலர்கள் உறுதியளித்தனர்.வன எல்லை கிராமங்களில், சாகுபடி பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டு வந்த நிலையில், கால்நடைகளும், வேட்டையாடப்பட்ட சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X