பொது செய்தி

தமிழ்நாடு

மலைவாழ் பகுதி பள்ளிகளின் கட்டமைப்பு: அரசு ஆய்வு செய்ய வலியுறுத்தல்

Added : பிப் 10, 2020
Advertisement

உடுமலை;மலைப்பகுதி குழந்தைகள், தடையில்லாத அடிப்படை கல்வி பெற, மலைவாழ் பகுதி பள்ளிகளின் கட்டமைப்புகளை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், ஐந்து மலைப்பகுதிகளில் துவக்கப்பள்ளிகள், 2002ம் ஆண்டு துவக்கப்பட்டன. கோடந்துார், குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, தளிஞ்சி, உள்ளிட்ட பகுதிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டன.இப்பள்ளிகளில் தற்போது, பதிவேடுகளில் இருப்பது ஒரு கணக்காகவும், வகுப்பில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிலிருந்து வேறுபட்டும் உள்ளது.குருமலையில், பள்ளி துவங்குவதற்காக, தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடிசை மட்டுமே இதுவரை பள்ளியாக செயல்பட்டு வருகிறது.குழிப்பட்டியில் உள்ள கட்டடம் மண் சுவர்களால் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எப்போது விழும் என்ற அச்சத்தில் தான் அனைவரும் அப்பள்ளிக்குச்செல்கின்றனர்.கோடந்துார், மாவடப்பு, தளிஞ்சி, மலைப்பகுதி பள்ளிகளிலும், பள்ளிக்கட்டடம் என பெயரளவில், பள்ளி துவக்கப்பட்டதோடு அமைக்கப்பட்டதோடு எந்த பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.கோடந்துார், தளிஞ்சி பகுதி பள்ளிகளில், பத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கின்றனர். மற்ற மூன்று பள்ளிகளிலும், இரண்டு, மூன்று என்ற கணக்கில் தான் குழந்தைகள் வருகின்றனர்.குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் நிறைந்த முழுமையான பள்ளி இல்லாத நிலையால் மட்டுமே, அவர்கள் மலையிறங்கி உண்டு உறைவிடப்பள்ளிகளுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.உடுமலை சுற்றுப்பகுதி மலைப்பகுதிகளில் குழந்தைகள் இருப்பினும், சில உண்டு உறைவிடப்பள்ளிகளில், வால்பாறை, மறையூர், மூணார் உள்ளிட்ட வேறு பகுதி குழந்தைகள் தான் அதிகமாக உள்ளனர். பள்ளிக்கு மாணவர்கள் வருவதில் சிக்கல் ஒருபக்கமாக இருப்பினும், ஆசிரியர்கள் இப்பள்ளிகளுக்கு செல்வதிலும் அரிதாக இருக்கும் நிலைதான் உள்ளது.கட்டட வசதி இல்லாததால், ஆசிரியர்கள் தங்குவதற்கான எந்த அடிப்படை வசதிகளும் அங்கு இல்லை. இதனால், பெண் ஆசிரியர்கள், மலைப்பகுதி பள்ளிகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதால், மாணவர்கள் இல்லாத மலைப்பகுதி பள்ளிகளாக மட்டுமே தற்போது அவை உள்ளன. அரசுத்துறை அதிகாரிகள், இப்பள்ளிகளை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே அந்த குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி முழுமையாக கிடைக்கும் நிலை உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X