நெற்கதிர்களில் பரவி வரும் நோய்த்தாக்குதல்: கல்லாபுரம் விவசாயிகள் வேதனை

Added : பிப் 10, 2020
Advertisement

உடுமலை;அறுவடைக்கு தயாராகும் நெற்கதிர்களில் பரவி வரும் நோய்த்தாக்குதலால், கல்லாபுரம் பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.உடுமலை அருகே கல்லாபுரம், பூச்சிமேடு, கோபாலபுரம் சுற்றுப்பகுதிகளில், அமராவதி அணை பாசனத்துக்கு, நெல் சாகுபடி பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. பல கட்டங்களாக நடவு செய்யப்பட்ட, சாகுபடியில், அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது.தாமதமாக நடவு செய்யப்பட்ட சம்பா பருவ விளைநிலங்களில், நெற்கதிர்கள், அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், நெல் மணிகளில் ஒரு வித பூஞ்சாணம் பரவி, அவை முற்றிலுமாக கருப்பாக மாறி விட்டன; இதனால், நெல்லின் தரம் குறைந்து, விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கூறியதாவது: நடப்பு சீசனில் பல்வேறு நோய்த்தாக்குதலால், நெல் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குலை நோய்த்தாக்குதலால், மகசூல் வெகுவாக குறையும் நிலை உருவானது.அந்த மகசூலுக்கும் சிக்கல் ஏற்படுத்தும் வகையில், தற்போதைய நோய்த்தாக்குதல் உள்ளது. பாதிப்பு குறித்து, வேளாண்துறை, வருவாய்த்துறை இணைந்து, ஆய்வு நடத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்; அதன்படி, அரசும் நிவாரணம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், கடன் வாங்கி, சாகுபடி பணிகளை மேற்கொண்ட, நுாற்றுக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் கடனாளியாகும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அடுத்த சீசனில், தொழில்நுட்ப ஆலோசனைகளை வேளாண்துறையினர், 'வரும் முன் காப்போம்' என்ற அடிப்படையில் முன்னதாகவே தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X