மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி: உடுமலை பள்ளி முதலிடம்

Added : பிப் 10, 2020
Advertisement

உடுமலை;உடுமலையில் நடந்த மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டியில் மகளிர் பிரிவில் லுார்துமாதா பள்ளி அணி முதலிடம் பெற்றுள்ளது.முதல்வர் கோப்பைக்கான ஹாக்கிப்போட்டி, திருப்பூர் மாவட்ட அளவில் உடுமலை, நேதாஜி மைதானத்தில் நடந்தது.மாவட்ட அளவில், 25 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளுக்கான போட்டிகளும் நேற்று நடந்தது.போட்டிகளை முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர்கள், தன்ராஜ், சோமசுந்தரம் துவக்கி வைத்தனர். பெண்களுக்கான பிரிவில் உடுமலை லுார்துமாதா பள்ளி அணி, ஆர்.கே., அகாடமிக் கிளப், திருப்பூர் ஏ.பி.எஸ்.,பள்ளியிலிருந்து 'ஏ' மற்றும் 'பி' அணிகள், திருப்பூர் செஞ்சுரி பள்ளிகளும், ஆண்களுக்கான பிரிவில், வித்யாசாகர் கல்லுாரி அணி, காங்கேயம் மெர்சி பள்ளி அணி, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி, செஞ்சுரி பள்ளி அணிகளும் விளையாடின.இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் அணிக்கு, 18 ஆயிரம் ரூபாய், 13 ஆயிரத்து 500 ரூபாய், 9500 ரூபாயும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்படுகிறது.பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில், லுார்துமாதா மற்றும் ஆர்.கே., அகாடமி கிளப் போட்டியிட்டது. இதில், 2-1 என்ற கோல் கணக்கில், லுார்துமாதா பள்ளி அணி முதலிடத்திலும், ஆர்.கே., அகாடமி இரண்டாமித்தையும் பிடித்தன.தொடர்ந்து, ஏ.பி.எஸ்., 'ஏ' அணி, 4-0 என்ற கோல் கணக்கில், செஞ்சுரி அணியை வீழ்த்தி, மூன்றாமிடத்தை பெற்றது.பெண்களுக்கான ஆட்டத்தை தொடர்ந்து, ஆண்களுக்கான போட்டி நடந்தது. இதில், வித்யாசாகர் கல்லுாரி அணி 3-0 என்ற கோல் கணக்கில் காங்கேயம் மெர்சி பள்ளி அணியை வீழ்த்தி முதலிடத்தில் வெற்றி பெற்றது. மெர்சி பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது. தொடர்ந்து, பெதப்பம்பட்டி பள்ளி அணி, 1-0 என்ற கோல் கணக்கில் செஞ்சுரி பள்ளி அணியை வீழ்த்தி மூன்றாமிடத்தில் வெற்றி பெற்றது.முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் அணிகளிலிருந்து சிறந்த விளையாட்டு வீரர்கள், 18 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X