பொது செய்தி

தமிழ்நாடு

சிதிலமடைந்துள்ள நீர்தேக்கத்தொட்டி: ஊராட்சி நிர்வாகம் அகற்றுவது அவசியம்

Added : பிப் 10, 2020
Advertisement
 சிதிலமடைந்துள்ள நீர்தேக்கத்தொட்டி: ஊராட்சி நிர்வாகம் அகற்றுவது அவசியம்

உடுமலை:உடுமலை, பெரியகோட்டை ஊராட்சியில் பொதுமக்களுக்கு ஆபத்தான நிலையில், சிதிலமடைந்துள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும்.உடுமலை, பெரியகோட்டை ஊராட்சி சிவசக்தி காலனி பகுதி இரண்டாவது வார்டில், பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டுக்கு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில், 30க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. ஐந்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டி அமைக்கப்பட்டு, ஐம்பது ஆண்டுகளையும் கடந்து விட்டது. தற்போது, பராமரிப்பில்லாமல் முழுவதுமாக சிதிலமடைந்து, இடியும் நிலையில் உள்ளது.இருப்பினும், இந்த தொட்டியிலிருந்து மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மேல்நிலைத் தொட்டி, மேற்புறம் முழுவதும் இடிந்துள்ளது.தொட்டி சுத்தம் செய்யப்பட்டும் பல ஆண்டுகளை கடந்துவிட்டதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதனால், குடிநீர் சுத்தமில்லாமல் கழிவுகள் கலந்து வருகிறது. இப்பகுதி குழந்தைகள் இதனால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர். மேல்நிலைத்தொட்டியின் அருகிலுள்ள குடியிருப்புகள், தொட்டியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் குடிநீர் பிடிக்க வேண்டும்.
எப்போதும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் தொட்டியால், அங்கு குடிநீர் பிடிக்கும் மக்களுக்கும் எந்நேரமும் ஆபத்து காத்திருக்கிறது. மேல்நிலைத் தொட்டி அருகே கோவில் இருப்பதால், அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்களும் அச்சத்துடன் தான் செல்கின்றனர்.மேல்நிலைத்தொட்டி பராமரிக்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டதால், தொட்டியின் மேல் மரக்கன்றுகளும் வளர துவங்கியுள்ளன. அப்பகுதி மக்களுக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் தொட்டியை அகற்றி விட்டு, குடிநீர் வினியோகத்துக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X