ஒரு பள்ளிக்கு ஒரு 'டேப்லெட்' வினியோகத்தால் சிக்கல்: அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் சிக்கல்

Added : பிப் 10, 2020
Advertisement

உடுமலை;உடுமலை கல்வி மாவட்டத்தில், ஒரு பள்ளிக்கு ஒரு 'டேப்லெட்' மட்டுமே வழங்கப்பட்டதால், மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில், 'க்யூ ஆர்' கோட் பயன்படுத்தி பாடம் நடத்துவதில் தாமதமாகிறது.கடந்த கல்வியாண்டில், கல்வித்துறையின் புதிய திட்டமாக, புத்தகங்களில் 'க்யூ ஆர்' கோட் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதனை 'ஸ்கேன்' செய்து, மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு கற்பித்தல் செயல்பாடாக வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு பாடம் நடத்துவதற்கு, ஆசிரியர்களுக்கு 'டேப்லெட்', எனப்படும் கையடக்க கம்ப்யூட்டர் வழங்கப்படும் என அரசு அறிவித்து, பல மாதங்களான பின்னர் தான் வழங்கப்பட்டது.அதுவரை, ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்தி, 'க்யூ ஆர்' கோட் ஸ்கேன் செய்து பாடம் நடத்தினர். மொபைல் போன் பயன்படுத்தி, நடத்துவதால், அனைத்து மாணவர்களுக்கும் இத்திட்டத்தை கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது.நடப்பு கல்வியாண்டில் உடுமலை கல்வி மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளிகளில் 'டேப்லெட்' வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கு ஒன்று என்ற விகிதத்தில் வழங்கப்பட்டுள்ளதால், மீண்டும் 'மொபைல்' பாடநிலை தான் பள்ளிகளில் பின்பற்ற வேண்டியுள்ளது.பெரும்பான்மையான நடுநிலைப்பள்ளிகளில் இது சாத்தியமில்லை.இதனால், ஒரு வகுப்பு 'டேப்லெட்டை' பயன்படுத்தியும், மற்ற வகுப்பு ஆசிரியர்கள் மொபைல் போன்களை பயன்படுத்தியும்தான் பாடம் நடத்துகின்றனர்.தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிப்பதால், குழந்தைகளும் அதிக ஆர்வமடைகின்றனர். இந்நிலையில், அதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் சூழல் குழந்தைகளை ஏமாற்றமடையச்செய்கிறது.'க்யூ ஆர்', பயன்படுத்தி, பாடம் நடத்துவதற்கு கூடுதல் டேப்லெட்கள் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X