பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றியத்தில் திறந்தவெளி கழிப்பிடம்: தீர்வுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை தீவிரம்

Added : பிப் 10, 2020
Advertisement

உடுமலை;உடுமலை ஒன்றியத்தில், திறந்த வெளிக் கழிப்பிட நிலைக்கு தீர்வு காண விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன.கிராமங்களில், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு அடுத்த பிரச்னையாக இருப்பது சுகாதாரம் தான். உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன.திறந்த வெளியில் சிறுநீர், மலம் கழிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள், அசுத்தமாகும் சூழல் குறித்து, பல வழிகளிலும் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையை மாற்றவே, தனிநபர் இல்லக்கழிப்பிட திட்டம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், கிராமங்களில் திறந்தவெளிக்கழிப்பிட நிலைக்கு தீர்வில்லாமல் உள்ளது.உடுமலையில், வடபூதிநத்தம், வாளவாடி, அம்மாபட்டி, உட்பட சில ஊராட்சிகளில், இப்பிரச்னையால், சுகாதாரம் முற்றுலுமாகவே பாதிக்கப்பட்டுள்ளது.குடியிருப்புகளுக்கு அருகில், பள்ளிக்கு செல்லும் ரோடுகள், பிரதானமான ரோட்டோரங்களும் திறந்த வெளிக்கழிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்களை பெரிதும் பாதித்து வருகிறது.ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில், அதிகாலையில், 'விசில்' அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை பின்பற்றப்பட்டது.இருப்பினும், அசுத்தமான ரோடுகளுக்கு விடிவு ஏற்படவில்லை. சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினர் மகளிர் குழுவினர், தன்னார்வலர்கள் ஒரு குழுவாக இணைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் சில கிராமங்களில் தீவிரமாக பின்பற்றப்படுகிறது.ஊராட்சி பிரதிநிதிகள் மூலம், கிராம சுகாதாரத்தை மேம்படுத்தும் விழிப்புணர்வு செயல்பாடுகளை தீவிரப்படுத்த ஒன்றிய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு ஊராட்சியிலும், அந்தந்த ஊராட்சித்தலைவர்கள், மக்களுடன் அவ்வப்போது கூட்டம் நடத்தி, சுகாதாரம் குறித்தும், திறந்த வெளிக்கழிப்பிட நிலையால் உள்ள பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.பி.டி.ஓ., ஜீவானந்தம் கூறியதாவது: தனிநபர் இல்லக்கழிப்பிட திட்டத்தில், 2017 கணக்கெடுப்பில், விடுபட்ட, 450 வீடுகளுக்கு கழிப்பிடங்கள் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. இதில், பெரும்பான்மையான பகுதிகளில், கழிப்பிடம் கட்டுவதற்கு இடவசதியில்லை என புகார் அளித்திருந்தனர்.தற்போது அதற்கும் அரசு வழிவகை செய்துள்ளது.
ஆதிதிராவிடர் காலனிகளில், கழிப்பிடம் கட்ட இடவசதியில்லாத வீடுகளுக்கென சமுதாய கழிப்பறை கட்டும் திட்டத்தை செயல்படுத்துகிறது.மூன்று அல்லது நான்கு வீடுகளுக்கு ஒரு சமுதாய கழிப்பறை கட்டுவது தான் இத்திட்டம். ஒரு பகுதிக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும். திட்டத்தை செயல்படுத்துவதற்கு, கிராமங்களில் ஆய்வு செய்யப்பட்டு, பட்டியல் தயார்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X