பொது செய்தி

தமிழ்நாடு

காய்ந்த மரங்கள் தீ வைத்து எரிப்பு :இயற்கை ஆர்வலர்கள் கவலை

Added : பிப் 10, 2020
Advertisement

உடுமலை:உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் அதிகளவு மரங்கள் இருந்தன. போதிய பராமரிப்பு இல்லாமல், அணைப்பூங்கா பகுதியில் இருந்த, 10க்கும் அதிகமான மரங்கள் கருகி, வெட்டி அகற்றப்பட்டது.தற்போது, மீன்வளர்ச்சி கழகத்தின், மீன்குஞ்சுகள் பராமரிப்பு தொட்டி அமைந்துள்ள பகுதியில், பெரிய மரங்கள் கருகி, கீழே விழுந்துள்ளன.அவற்றை அகற்றி விட்டு, புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க, அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, கீழே விழுந்த மரங்களின் கிளைகளை தீ வைத்து எரிக்கின்றனர். பசுமையை பாதுகாக்க வேண்டிய அரசுத்துறை அதிகாரிகளே, விதிமுறைகளை மீறி மரங்களை எரிப்பது இயற்கை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் மனு அனுப்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X