முதல்வர் கோப்பை வாலிபால் போட்டி: குன்னூர் சாந்தி விஜய் பள்ளி வெற்றி

Added : பிப் 10, 2020
Advertisement

ஊட்டி;ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான வாலிபால் போட்டி நடந்தது.மாவட்டத்தை சேர்ந்த 5 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில், குன்னுார் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலை பள்ளி அணி 25-14, 25 -12 என்ற புள்ளிகள் கணக்கில், வெற்றி பெற்றது.போட்டியை ஊட்டி ஆர்.டி.ஓ., சுரேஷ் துவக்கி வைத்தார். வாலிபால் கழக செயலாளர் ஜெகநாதன் சிறப்புரையாற்றினார். முத்திரை பாலாடா விவேகானந்தா மெட்ரிக்பள்ளி இரண்டாமிடமும், பிராவிடன்ஸ் கல்லுாரி அணி மூன்றாமிடமும் பெற்றனர்.முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா, 1000, 750, 500 ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. முதல்வர் கோப்பையை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயச்சந்திரன் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவியருக்கு, குன்னுார் சாந்தி விஜய் பள்ளி தாளாளர் காந்திலால் சோர்ஷியா, தலைமையாசிரியை வைரமணி, உடற்கல்வி ஆசிரியர் உஷாராணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X