சாலையில் கால்நடைகள் உலா போக்குவரத்துக்கு சிரமம்

Added : பிப் 10, 2020
Advertisement

கூடலுார்:கூடலுார், நகர சாலையில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் கால்நடைகளால், டிரைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.கூடலுார் நகர சாலை, உள்ளூர் மட்டுமின்றி கர்நாடகா, கேரள பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். போதுமான, இடவசதி இல்லாததால், அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.மேலும், கால்நடைகள் அதிகளவில், சாலையில் உலாவர துவங்கியுள்ளதால், வாகனங்களை ஓட்டி வருபவர்கள், சாலையோர நடைபாதையில் செல்லும் மக்களும் திணறுகின்றனர். புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், அதிருப்தி அடைந்துள்ளனர்.டிரைவர்கள் கூறுகையில், 'கூடலுார் நகர சாலையில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், நகரில் உலா வரும் கால்நடைகளால், வாகன விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X