பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் நீதிமன்றத்தில் 653 வழக்குகளுக்கு தீர்வு

Added : பிப் 10, 2020
Advertisement

ஊட்டி:நீலகிரியில் மக்கள் நீதிமன்றம் மூலம், 653 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.ஊட்டியில் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில், மக்கள் நீதிமன்றம்,மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை தலைமையில் நடந்தது.இதில், நிலுவையில் உள்ள, சிறு குற்ற வழக்குகள்; குடும்ப பிரச்னை; தொழிலாளர் வழக்குகள்; காசோலை வழக்குகள்; சிவில் வழக்குகள்; தேசிய வங்கிகளில் வாராக்கடன் சம்பந்தமான அனைத்து வகை வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன.மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த, 861 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டன. அதில், 525 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மதிப்பு ஒரு கோடியே 75 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்.வங்கிகளின் வாராக்கடன் சம்பந்தமாக, 360 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், 128 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. அதன் மதிப்பு ஒரு கோடியே 25 லட்சத்து 74 ஆயிரத்து ரூபாய். மொத்தம்,1,221 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில், 653 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுரேஷ்குமார், ஊட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X