பொது செய்தி

தமிழ்நாடு

குமரமுருகன் கோவிலில் தேர் திருவிழா உற்சவம்

Added : பிப் 10, 2020
Advertisement

கூடலுார்:கூடலுார், குசுமகிரி குமரமுருகன் கோவிலில், தேர் திருவிழா சிறப்பாக நடந்தது.கூடலுார் குசுமகிரி பகுதியில் உள்ள குமரமுருகன் கோவிலில், திருவிழா கடந்த, 6ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம், சிறப்பு அபிஷேகம், முருகனுக்கு பஞ்சாமிருத அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், துவங்கிய திருத்தேர் ஊர்வலத்தை டி.எஸ்.பி., ஜெய்சிங் துவக்கி வைத்தார். சிறப்பு அலங்காரத்தில் முருகன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஊட்டி - மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக கூடலுார் விநாயகர் கோவில், மேல் கூடலுார் மாரியம்மன் கோவில் சென்று, முக்கிய சாலை வழியாக கோவிலை வந்தடைந்தது. இதற்கான, ஏற்பாடுகளை கோவில் கமிட்டி செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X