பொது செய்தி

தமிழ்நாடு

காபி அறுவடை சீசன் துவக்கம்: உலர்த்தும் பணியில் விவசாயிகள் தீவிரம்

Added : பிப் 10, 2020
Advertisement
 காபி அறுவடை சீசன் துவக்கம்: உலர்த்தும் பணியில் விவசாயிகள் தீவிரம்

பந்தலுார்;பந்தலுார் பகுதியில் காபி அறுவடை சீசன் துவங்கியுள்ள நிலையில், காபி கொட்டைகள் உலர்த்தும் பணியில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பந்தலுார், கூடலுார் பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக, காபி விவசாயத்தில் அதிகளவு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். காபி தோட்டங்கள் அதிகளவில் உள்ளதால், கூடலுார் கோழிப்பாலத்தில் உள்ள காபி வாரிய அலுவலகம் மற்றும் வயநாடு பகுதியில் உள்ள தலைமை அலுவலகம் மூலம், காபி விவசாயத்தை மேம்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இதில் 'ரொபஸ்டா' வகை காபி அதிகளவில் விளைவிக்கப்படும் நிலையில், தோட்டங்களில் தற்போது காபி அறுவடை சீசன் துவங்கியுள்ளது. இந்த பணியில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, குண்டல்பேட் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.நன்றாக பழுத்த காபி, அறுவடை செய்த பின்னர், உலர்த்தப்படுகிறது. நன்கு உலர்ந்த பின்னர், அவற்றை சாக்கு பைகளில் போட்டு, பாதுகாக்கின்றனர். நல்ல விலை கிடைக்கும் போது, மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர்.விவசாயி மத்தாய் கூறுகையில், ''கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு விளைச்சல் குறைவாக உள்ளது. போதியளவு விலை உள்ள நிலையில், காபி அறுவடை முடிந்து, உலர்த்தியபின்னரும் இதே முறையில் நல்ல விலை கிடைத்தால், காபி விவசாயிகள் லாபம் அடைவர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X