சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாக்கு மரத்திலிருந்து விழுந்தவர் உயிரிழப்பு

Added : பிப் 10, 2020
Share
Advertisement

பந்தலுார்:மண்வயல் பகுதியில் பாக்குமரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.பந்தலுார் அருகே கையுன்னி பி.ஆர்.எப்., ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் பிரதீப், 40. இவர் எருமாடு மண்வயல் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் பாக்குமரத்தில் ஏறி பாக்கு பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தவறி கீழே விழுந்ததில் தொழிலாளி பிரதீப் காயமடைந்தார். கேரள மாநிலம் சுல்தான் பத்தேரி அரசு மருத்துவமனையில், முதலுதவி செய்து, கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து எருமாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம், இதேபோல் மரத்திலிருந்து விழுந்த, பழங்குடியின இளைஞர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X