பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2705வழக்குகளுக்கு தீர்வு; ரூ.5.86 கோடிக்கு உத்தரவுகள் வழங்கல்

Added : பிப் 10, 2020
Advertisement
 தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2705வழக்குகளுக்கு தீர்வு; ரூ.5.86 கோடிக்கு உத்தரவுகள் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்துார்:மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2705 வழக்குகளுக்கு தீர்வு காணபட்டு, ரூ.5.86 கோடிக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா தலைமை வகித்தார். அமர்வு நீதிபதி சுமதி சாய்பிரியா, மக்கள் நீதி மன்ற தலைவர் பரிமளாமுன்னிலை வகித்தனர். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மாரியப்பன் வரவேற்றார்.

இதில் நிலுவையில் இருந்தசிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி வாராக் கடன்கள் மற்றும் சிறுவழக்குகள் உட்பட 5872 வழக்குகள் பரிசீலிக்கப் பட்டு, அதில் 2705 வழக்குகளுக்குதீர்வு காணப்பட்டு, ரூ.5 கோடியே 86 லட்சத்து 40 ஆயிரத்து 565க்கு உத்தரவிடப்பட்டது. மேலும் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மோட்டார் வாகன விபத்து வழக்கு முடிக்கப்பட்டு இழப்பீட்டு தொகை ரூ.7 லட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலையை மனுதாரர் சுப்புலட்சுமிக்கு, முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா வழங்கினார்.

இதில் தலைமை குற்றவியல் நீதிபதி சரண், சார்பு நீதிபதிகள் கதிரவன், சுந்தரி, உரிமையியல் நீதிபதி ஆனந்தி, நீதித்துறை நடுவர்கள் சந்திரகாசபூபதி மற்றும் பரம்வீர், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சிவப்பிரகாசம், சந்திரன், அரசு மருத்துவர் சுரேஷ், சிவகாசி நேஷனல் இன்சூரன்ஸ் முதுநிலை கிளை மேலாளர் சந்திரன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வல சட்ட பணியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள், வங்கி மேலாளர்கள், இன்சூரன்ஸ் கம்பெனி அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஊழியர்கள், நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர். இதேபோல் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம் வட்ட சட்டப் பணி குழுக்கள் சார்பில் அந்தந்த நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X