பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் சந்திப்பு மேம்படுத்தும்பணி நிறைவு | Dinamalar

தமிழ்நாடு

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் சந்திப்பு மேம்படுத்தும்பணி நிறைவு

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020
Share
 பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் சந்திப்பு மேம்படுத்தும்பணி நிறைவு

சென்னை:பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பாரிவாக்கம் சந்திப்பை மேம்படுத்தும் பணிகள் நிறைவடைந்து உள்ளன.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஒருபகுதியாக, மதுரவாயல் - பூந்தமல்லி இடையிலான சாலை உள்ளது. இந்த சாலையை, ஆறு வழியாக விரிவாக்கம் செய்யும் பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கிடப்பில் போட்டுள்ளது.இதனால், சாலை பல இடங்களில் சேதம் அடைந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, வானகரம், திருவேற்காடு, பாரிவாக்கம் சந்திப்புகளில் மணிக்கணக்கில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலையில் இருந்தது.இந்த சந்திப்புகளை கான்கிரீட் சாலைகளாக அமைத்து, மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.இதற்காக, 10 கோடி ரூபாயை ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியை பயன்படுத்தி, 2019 செப்டம்பர் மாதம் பணிகள் துவங்கின.
வானகரம் சந்திப்பின் ஒருபகுதி, டிசம்பர் மாத இறுதியில் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.மற்ற சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, பாரிவாக்கம் சந்திப்பில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.அங்கு, சாலையில் போக்குவரத்து எல்லை கோடுகள் வரையும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வாரத்தில், சாலையில் போக்குவரத்தை அனுமதிக்கவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X