சம்பவம் செய்தி

தமிழ்நாடு

14 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

Added : பிப் 10, 2020
Advertisement

சென்னை:சென்னையில், தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்த 14 பேர், 'குண்டர்' தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கீழ்ப்பாக்கம், மண்டபம் சாலையைச் சேர்ந்தவர் லோகநாதன், 28. அவர் மீது, தன் உறவுக்கார சிறுமியை கொலை செய்த வழக்கு உள்ளது. ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜன், 40. இவர் மீது, மனைவியை எரித்துக் கொன்றது உட்பட, பல வழக்குகள் உள்ளன. புளியந்தோப்பைச் சேர்ந்தவர் மாரி, 33. இவர் மீது, கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.இவர்கள் உட்பட, 14 பேரை, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்படி, போலீசார் நேற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X