பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்

Added : பிப் 10, 2020
Advertisement

ராஜபாளையம்:ராஜபாளையம் இந்திய கம்யூ., கட்சி அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.

அமைப்பு செயலாளர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் விஜயன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட செயலாளர் லிங்கம் பேசினர். புதிய மாவட்ட தலைவராக சமுத்திரம், செயலளராக முத்துமாரி தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி கூறுகையில், ''ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கூலி முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. துப்புரவுத் தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை அமுல்படுத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்துள்ள உத்தரவை தமிழக அரசு மதிப்பதில்லை.

தற்போது தொழிலாளர்களின் வாழ்க்கை மிகுந்த நெருக்கடியில் சிக்கியுள்ளது.44 தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு நான்கு சட்டங்களாக சுருக்கி உள்ளது. எட்டு மணி நேர வேலை என்பது தற்போது மாற்றப்பட்டுள்ளது. பல போராட்டங்களுக்குப் பின் தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை, மத்திய அரசின் சட்டம் கலைப்பதற்கு வசதி செய்து தருகிறது, என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X