அடிக்கடி உடையும் குழாய் தொடர்ந்து வீணாகும் தண்ணீர்: அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமா

Added : பிப் 10, 2020
Advertisement

ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே ரோடு பணிகளால் ஏற்பட்ட குழாய் சேதத்தால் வழிந்தோடும் நீரை புழக்கத்திற்கு எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்காபுரம் கிராமத்திற்கு முதுகுடி வழியாக ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தாமிரபரணி குடிநீர் குழாய் சென்று வருகிறது.ரோடு விரிவாக்கப் பணிக்காக தோண்டும் போது குழாய் சேதமடைந்து நீர் வீணாகி வருகிறது. இந்நிலையில் புழக்கத்திற்காக அமைக்கப்பட்ட குழாயும் சேதமடைந்ததால் தண்ணீருக்கு இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

இதனால்வேறு வழியின்றிவழிந்து செல்லும் நீரை குடங்களில் எடுத்து செல்லும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். நோய் தொற்று ஏற்படும் முன் விரைந்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.முனியம்மாள், குடும்பத்தலைவி: இப்பகுதி ரோடு விரிவாக்க பணியின் போது குழாயை உடைத்து விட்டனர்.

மண் அள்ளும் இயந்திரம் மூலம் சுரண்டி எடுக்கும் போது குழாய் சேதம் ஏற்பட்டு சப்ளை நிறுத்தப்பட்டு விட்டது. குடிப்பதற்கும், புழங்குவதற்கும் ஒரு வாரத்திற்கும் மேல் ஆன சூழலில் குழாயில் இருந்து வெளியேறி வீணாகும் நீரை சேகரித்து பயன்படுத்தி வருகிறோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X