பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி-கோவை ரோட்டில் சுரங்கப்பாதைக்கு கோரிக்கை

Added : பிப் 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement

கிணத்துக்கடவு:பொள்ளாச்சி-கோவை, நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன. இதில், கிணத்துக்கடவு முதல் பொள்ளாச்சி வரை, பணி நிறைவடைந்துள்ளது.ஆச்சிபட்டி, கோவில்பாளையம், தாமரைக்குளம், கல்லாங்காட்டுப்புதுார் போன்ற கிராமங்களின் பஸ் ஸ்டாப் அருகே, ரோட்டை கடந்து செல்ல முடியாமல், 'சிமென்ட் சிலாப்' தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.இதனால், கிழக்கு, மேற்கு பகுதியில் உள்ள பொதுமக்கள் கோவை செல்வதற்கு, சிமென்ட் சிலாப் மீது ஏறி, மேற்கு மற்றும் கிழக்கு பகுதி ரோட்டினை கடந்து செல்லும் அவலநிலை நீடித்து வருகிறது.ரோட்டினை கடக்கும்போது, அதிவேகமாக வரும் வாகனங்களால், பெரும் விபத்து ஏற்பட்டு உயர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.இதனை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டின் அடியில் சுரங்கப்பாதை அமைத்துக் கொடுத்தால், பொதுமக்கள் பாதுகாப்பாக மறுபக்கம் சென்று வருவார்கள்.வயதானவர்கள் கூட சுரங்கப்பாதையை பயன்படுத்துவது எளிதாக இருக்கும். ஆனால், ரோட்டினை கடப்பதற்கு, இரும்பு உயர்மட்ட பாலம் அமைக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.உயர்மட்ட பாலத்தின் மேல் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர்களால் மட்டுமே செல்ல முடியும். மற்றபடி நடுத்தர வயதுள்ளவர்கள் மற்றும் வயதானவர்களால், பாலத்தின் மேல் ஏறி செல்ல முடியாது.இதனால், ரோட்டினை கடக்க சுரங்கப்பாதை அமைத்துக் கொடுத்தால் மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும்.இதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
10-பிப்-202010:13:10 IST Report Abuse
RADE தரை மட்ட பாலம் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் மற்றும் இரவு நேரம் பாதுகாப்பு இன்மையாகவும் பிச்சைகாரர்கள் புகலிடம் ஆகவும் அமையும். பொருட்டு செலவு கருதாமல் உயர் மட்ட பாலம் பாலம் X வடிவிலும், ஏறுவதற்கு தாழ்வான படி அல்லது தாழ்வாக தளம் Z வடிவிலும் அமைத்து கொண்டால் முதியோர்கள் பயன்பாட்டிற்கு சிரமம் இல்லை. X வடிவில் உள்ள பாலத்தின் 4 முனைகள் Z வடிவ தாழ்வு தளம் உடன் இணைக்க வேண்டும். ரோட்டின் இரு புறமும் தாழ்வு தளம் அமைப்பு கொண்டு நான்கு வழிகள் வடக்கு மற்றும் தெற்கில் இருந்து வருபவர்களுக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு வழியை பயன்படுத்தி பாலத்தின் மீது ஏறி, எந்த திசை நோக்கி போக வேண்டும்மோ அத்திசை காண பாதை X வடிவ சந்திப்பில் தேர்ந்து எடுத்து கொள்ளலாம். தேவை என்றால் கூடுதலாக இரு புறமும் எப்பொழுதும் போல் செங்குத்தாக படி அமைத்தால் விரைவாக படி ஏறுபவர்கள் அதை பயன் படுத்தலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X