பொது செய்தி

தமிழ்நாடு

கழிவறை சாவி மேலாளர் அறையில்! 'அவசரத்துக்கு' உதவாத ரயில்வே

Added : பிப் 10, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் கழிவறைகளை பூட்டி, சாவியை மேலாளர் அறையில் வைத்திருப்பதால், இயற்கை உபாதை அவசரத்தில் வரும் பயணிகள் தவிக்கின்றனர்.பொள்ளாச்சி வழித்தடத்தில், இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள், மூன்று பயணிகள் ரயில்கள், அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயங்குகின்றன. ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும், 4,000 மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.இத்தனை பேர் பயன்படுத்தும் ஸ்டேஷனில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு கழிப்பிடம் உள்ளிட்ட கழிவறைகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் சாவிகள், ஸ்டேஷன் மேலாளர் அறையில் உள்ளதாக அறிவிப்பும் வேறு ஒட்டி வைத்துள்ளனர்.இயற்கை அழைப்பின் அவசரத்தில் வரும் பயணிகள், பல நுாறு மீட்டர் நீண்ட பிளாட்பாரத்தில் சென்று, சாவி பெற்று வந்து கழிப்பிடத்தை பயன்படுத்துவது நடைமுறையில் சாத்தியமா?பயணிகளின் நிலை குறித்து கவலையின்றி, இது போன்ற 'அதிபுத்திசாலித்தனமான' ஏற்பாட்டை செய்துள்ள ஸ்டேஷன் நிர்வாகத்தின் மீது, கடும் அதிருப்தி நிலவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X