பஸ் ஸ்டாண்டில் உட்கார இடமில்லீங்க... படிக்கட்டுகளில் பயணிகள் அமரும் அவலம்

Added : பிப் 10, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி;பொள்ளாச்சி பழைய பஸ்ஸ்டாண்டில், போதுமான இருக்கை வசதி இல்லாததால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பொள்ளாச்சி பழைய பஸ்ஸ்டாண்டில், உள்ள நெரிசலை தவிர்க்கும் வகையில், சப்-கலெக்டர் அலுவலகம் எதிரில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.பழைய பஸ் ஸ்டாண்டில், கோவை, பழநி, திருப்பூர் செல்லும் பஸ்களும்; புது பஸ் ஸ்டாண்டில், கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களும் வந்து செல்கின்றன. ஆனால், பழைய பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் கூட மேம்படுத்தப்படாமல் உள்ளது.பயணிகள் அவதிபயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள், போதுமானதாக இல்லை. மேலும், பயணிகள் அமரக்கூடிய இடம், நடைபாதை என அனைத்து இடங்களிலும் ஆக்கிரமிக்கப்பட்டு, கடைகள் விரிக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் நடக்கவும்; உட்கார முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பஸ் வரும் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பஸ் ஸ்டாண்டில் உள்ள படிக்கட்டுகளிலும்; கிடைக்கும் இடங்களிலும் அமர்கின்றனர்.பயணிகள் கூறியதாவது: பஸ்ஸ்டாண்டில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் சிரமம் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்ற பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. இதனால், உட்கார கூட இட வசதியில்லை.வெளியூர் மக்கள், உட்கார இடமில்லாமல் திணறுகின்றனர். நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும்; போதுமான இருக்கை வசதிகள், கழிப்பிடங்கள் துாய்மையாக பராமரிப்பது உள்ளிட்ட, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, பயணிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X