குழாய் உடைப்பு; குடிநீர் வீண் சாக்கடை பணிகளால் திண்டாட்டம்

Added : பிப் 10, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணியால், குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விரயமாகிறது. இதனால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகளில், 90,124 மக்கள் தொகை உள்ளது. ஒன்பது உயர் மட்ட குடிநீர் தேக்க தொட்டி, இரண்டு தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு தினமும், 9.3 மில்லியன் லட்சம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.தனியாக போர்வெல் தண்ணீரும் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் போது, குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் பாதிக்கபடுவது தொடர்கதையாகியுள்ளது. இதனால், பல பகுதிகளில் மக்கள் விலைக்கு தண்ணீர் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், பாலகோபாலபுரம் வீதி சங்கர மடம் அருகே பாதாள சாக்கடை பணிகள் நடக்கின்றன. அங்கு, பொக்லைன் கொண்டு குழி தோண்டும் போது, குழாய் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் வீணாகிறது. ஊற்று போல அதிக தண்ணீர் வெளியேறி, வீணாக கழிவுநீர் கலக்கிறது.பல குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள சூழலில், தண்ணீர் விரயமாகுவது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பொதுமக்கள் கூறியதாவது: ஒரு பக்கம் குழாய் உடைப்பு ஏற்பட்டதை சரி செய்வதற்குள் மற்றொரு பகுதியில் குழாய் உடைப்பு ஏற்படுகிறது. இதனால், ஆட்கள் பற்றாக்குறை உள்ள சூழலில் கண்காணிப்பு, சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் திட்டப்பணிகளை அருகேயிருந்து கண்காணித்து, உரிய அறிவுரை வழங்க வேண்டும்.கோடை காலம் துவங்க உள்ள நிலையில், குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய அறிவுறுத்த வேண்டும்.குடிநீர் முறையாக வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X