மூன்றாவது தவணை திருத்தம் செய்தால் ஊக்கத்தொகை

Added : பிப் 10, 2020
Advertisement

ஆனைமலை:விவசாய ஊக்கத்தொகை திட்டத்தில், மூன்றாம் தவணைத்தொகை கிடைக்காத விவசாயிகள், பெயரில் திருத்தம் செய்து பெற, வேளாண்துறை அறிவுரை வழங்கி உள்ளது.மத்திய அரசு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, ஆறாயிரம் ரூபாய் வழங்கும், விவசாய ஊக்கத்தொகை திட்டத்தை (பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி) சமீபத்தில் அறிவித்தது. விவசாயிகளுக்கு, மூன்று தவணைகளாக பிரித்து தலா, இரண்டாயிரம் என மொத்தம், ஆறாயிரம் ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டது. அனைத்து தாலுகா பகுதியிலும், விவசாயிகள் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சென்று திட்டத்தில் பதிவு செய்தனர்.இந்நிலையில், திட்டத்தில் சேர்ந்தபோது, ஆன்லைனில் உள்ளீடு செய்யப்பட்ட விவசாயிகளின் பெயர், அவர்களின் ஆதார் அட்டையில் உள்ளதை போல ஒத்துப்போனால் மட்டுமே, தவணைத்தொகை அனுப்பப்பட்டு வருகிறது.ஆதார் அட்டையில் உள்ள பெயரைப்போல இல்லாமல், தவறுதலாக உள்ளீடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, மூன்றாவது தவணை அனுப்பப்பட வில்லை. இந்த தவறை சரி செய்த விவசாயிகளுக்கு மட்டுமே தவணைத்தொகை கிடைத்து வருகிறது.தவணைத்தொகை கிடைக்காத விவசாயிகள், ஆதார் எண் மற்றும் வங்கி புத்தக நகலுடன், அந்தந்த வேளாண் அலுவலகங்கள், சேவை மையம் சென்று, பெயரை திருத்திக்கொண்டு தவணைத்தொகை பெற, வேளாண் துறையினர் அழைப்பு விடுத்து உள்ளனர்.வேளாண் துறையினர் கூறியதாவது:தவணைத்தொகை கிடைக்காத விவசாயிகள் அந்தந்த வேளாண் அலுவலகம் சென்று, தங்கள் பெயரில் திருத்தம் தேவையா என தெரிந்து கொள்ள வேண்டும். அந்தந்த வேளாண் அலுவலகங்கள், அருகில் உள்ள சேவை மையம் மூலம் திருத்தம் செய்யலாம்.www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் சென்று, 'பார்மர் கார்னர்' என்பதை தேர்வு செய்து அதில், 'எடிட் ஆதார் பெய்லியர் ரெக்கார்டு' என்பதில், தங்கள் பெயரை ஆதாரில் உள்ளது போல திருத்தம் செய்து, தவணைத்தொகை பெறலாம்.அதேபோல், இத்திட்டத்தில் இதுவரை பயன்பெறாத விவசாயிகள், புகைப்படம், வங்கி புத்தகம் ஆதார் அட்டை நகல் மற்றும் சிட்டா கொண்டு சென்று, வேளாண் விரிவாக்க மையத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X