கிராமங்களில் ரோடு வசதியில்லை விபத்து அதிகரிப்பதால் கவலை

Added : பிப் 10, 2020
Advertisement

உடுமலை:உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையத்தில், ரோடு வசதியில்லாமல், பொது மக்கள் விபத்துக்குள்ளாவது அதிகரிக்கிறது.உடுமலை, நகரையொட்டி இருக்கும், மக்கள் தொகை அதிகம் கொண்டது கணக்கம்பாளையம் ஊராட்சி. இங்கு ஆண்டுதோறும், குடியிருப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஆனால், ஊராட்சிக்கான அடிப்படை வசதிகள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை. அடிப்படையான ரோடு வசதியே பெரும்பான்மையான பகுதிகளில் இல்லாதது, மக்களை வேதனைக்குள்ளாக்குகிறது.வெஞ்சமடை, ஆர்.ஜி.நகர் ரோடு, கணேசபுரம், மருள்பட்டி ரோடு உட்பட பல பகுதிகளில், தார் ரோடு அமைக்கப்பட்டு, இருபதாண்டுகளையும் கடந்திருப்பதால் ரோடுகள் சிதிலமடைந்துள்ளன.வாகன ஓட்டிகளுக்கு இந்த ரோட்டை கடந்து செல்வதே சவாலாக உள்ளது. மேலும், மழைநீர் வடிகால் வசதிகளும் ஏற்படுத்தப்படாமல் இருப்பதால், மழைக்காலங்களில் ரோடுகளில், தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரிக்கிறது.மேடு பள்ளமான ரோடுகளால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, முதியவர்கள் நடந்து செல்வதும் கடினமாக ஒன்றாகியுள்ளது.கணக்கம்பாளையத்தில், அடிப்படை வசதிகளில் முதற்கட்டமாக ரோடுகளை மேம்படுத்த ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X