கடத்துார் கோவிலில் தைப்பூச திருவிழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடத்துார் கோவிலில் தைப்பூச திருவிழா

Added : பிப் 10, 2020
Share

மடத்துக்குளம்:- மடத்துக்குளம் அருகே கணியூர், கடத்துார் கோவில்களில் தைப்பூச திருவிழா நடந்தது.மடத்துக்குளம் அருகே கடத்துாரில் நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் நடராஜர் தேர் முக்கிய தெருக்களில் திருவீதி உலா சென்று திரும்பியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கணியூர் ஜோதி கோவிலில், சமரச சுத்த சன்மார்க்க அருள் பெரும்ஜோதி வள்ளலார் பக்தர்கள் தைப்பூச விழா வழிபாடு நடத்தினர். இதில் திரளான பெண்கள் பங்கேற்று, தீபம் ஏற்றி வழிபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X