சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேலையூரில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

Added : பிப் 10, 2020
Advertisement

சேலையூர்:தந்தையை பழிவாங்க, மகன் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களை, சேலையூர் போலீசார் தேடி வருகின்றனர்.
கிழக்கு தாம்பரம், இரும்புலியூர், செல்லியம்மன் கோவில், ஒன்றாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர், சங்கர், 60. இவரது மகன், பார்த்திபன், 23; எலக்ட்ரீஷியன்.இவர், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில், செல்லியம்மன் கோவில் தெரு அருகில், தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த, நான்கு பேர் கும்பல், பார்த்திபனை மிரட்டியதுடன் கத்தியை, பின்பக்கமாக திருப்பி, வலது கையில் அடித்துள்ளனர்.இதை கண்ட அவரது உறவினர்கள், நால்வரையும் பிடிக்க முயன்றபோது, அவர்கள் மீது, சிறிய நாட்டு வெடிகுண்டை வீசி தப்பினர்.அதில், சங்கரின் உறவினர்கள், மூன்று பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து, சேலையூர் போலீசார் விசாரித்தனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:நெடுங்குன்றத்தைச் சேர்ந்த, விவேக் ராஜ், 26, என்பவருக்கும், பார்த்திபனின் தந்தை, சங்கர் மற்றும் அவரது உறவினர்களுக்கும், 2016ல், தகராறு ஏற்பட்டது.
இதில், சங்கரின் உறவினர்கள், விவேக்ராஜை கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.அதன்பின், பல்வேறு குற்ற வழக்குகளில் சிறைக்குச் சென்ற விவேக்ராஜ், சமீபத்தில் வெளியே வந்தார். வெளியே வந்தவர், தன் நண்பர்களான, தாம்பரத்தைச் சேர்ந்த, உதயா மற்றும் ராகுல் ஆகியோருடன் இணைந்து, சங்கரை பழிவாங்க, அவரை தேடி உள்ளார்.அப்போது, அவரது மகன் பார்த்திபனை கண்டதால், அவரை தாக்கி உள்ளார். தொடர்ந்து, அவரின் உறவினர்களிடம் இருந்து தப்பிக்க, நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். தப்பியோடியவர்களை தேடி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X