பொது செய்தி

தமிழ்நாடு

புதிய பாலம் கட்டும் இடத்தில் துணை சபாநாயகர் ஆய்வு

Added : பிப் 10, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், நெரிசலை கட்டுப்படுத்த ரோடுகள் விரிவாக்கப்பணிக்காக நிலம் கையகப்படுத்தி கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன.இந்நிலையில், மரப்பேட்டை பாலத்தில் நெரிசலை கட்டுப்படுத்த பாலம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.தற்போது, மரப்பேட்டை அருகே ஏற்கனவே உள்ள இருவழிப்பாதை பாலம், 12 மீட்டர் உள்ளது. அது போன்று அருகே குறுகலாக உள்ள தரை மட்ட பாலத்தை உயரப்படுத்தி, 12 மீட்டருக்கு அகலப்படுத்தப்படும்.உடுமலையில் இருந்து வரும் வாகனங்கள், புதியதாக உயரப்படுத்தப்படும் பாலம் வழியாக, மரப்பேட்டை அருகே அமைய உள்ள ஜங்ஷன் வழியாக திரும்பி செல்லும் வகையில் வழித்தடம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.புதியதாக பாலம் கட்டப்பட உள்ள இடத்தினை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பாலம் கட்டும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.'பாலம், 12 மீட்டர் அகலம், 100 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ளது,' என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, 11, 31வது வார்டுகளில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.சப் - கலெக்டர் வைத்திநாதன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், தாசில்தார் தணிகைவேல், நகராட்சி கமிஷனர் காந்திராஜ், நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X