பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு பேரணி

Added : பிப் 10, 2020
Advertisement
 குப்பை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு பேரணி

சென்னை:குப்பை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு பேரணி, ராஜா அண்ணாமலைபுரத்தில், நேற்று நடந்தது.
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், நேற்று, டூ - வீலர் பேரணி மற்றும் நடை பேரணி நடந்தது. பேரணியை, மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., நட்ராஜ் துவக்கி வைத்தார்.குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தரம் பிரித்து வழங்குவது குறித்து, அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இந்த பேரணி நடத்தப்பட்டது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.இது குறித்து, ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஆர்.சந்திரசேகர் கூறியதாவது:ஆர்.ஏ.புரத்தில், ஏழு மாதங்களுக்கு முன், குப்பையை தரம் பிரிப்பது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் விளக்கினர். அவர்களிடம், மக்கும், மக்காத குப்பையையும் தரம் பிரிக்கும் வகையில், எருக்குழிகள் அமைத்து தர வேண்டும் என, வலியுறுத்தினோம். அதைத் தொடர்ந்து, இங்குள்ள, முதல் மூன்று தெருக்களில், ஏழு எருக்குழிகளை அமைத்துக் கொடுத்தனர். அவற்றில், காய்கறி கழிவுகள், உணவுக் கழிவுகளை போட்டு வந்தோம். இப்போது, அது, கறுப்புத் தங்கம் என்ற, இயற்கை உரமாக மாறி இருக்கிறது.அதை, அடுத்த மாதம், காய்கறி செடிகள் மற்றும் பூச்செடிகளுக்கு பயன்படுத்தும் நிலையில் உள்ளது. இதேபோல, மற்ற தெருக்களிலும் செய்ய வேண்டும் என்பதற்காக, குடியிருப்போர் சங்கத்தின் சார்பில், குப்பை பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நடை பேரணி மற்றும் டூ - வீலர் பேரணியை நடத்தினோம்.
அப்போது, 'குப்பையைத் தரம் பிரித்து வழங்கினால், பெருங்குடி, கொடுங்கையூரில் உள்ள, குப்பைக் கிடங்கில் பாதியைக் குறைக்க முடியும். இதனால், அங்குள்ள மக்களின் சுகாதாரம் மற்றும் நிலத்தடி நீரின் தரம் உயரும்' என்பதை விளக்கினோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X