மேம்பாலத்தில் பறக்கும் விரைவு பஸ்கள்: பஸ் ஸ்டாண்டில் மக்கள் காத்திருப்பு

Added : பிப் 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு மேம்பாலத்தில், அரசு விரைவு பஸ்கள் செல்வதால், வெளியூர் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.பொள்ளாச்சி - கோவை நான்கு வழிச்சாலை பணியில், கிணத்துக்கடவில் மேம்பாலம் கட்டப்பட்டு, வாகனங்கள் பாலத்தில் செல்கின்றன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் கிணத்துக்கடவுக்குள் வராமல் மேம்பாலத்தில் சென்றது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் அரசு போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்தனர். இதனால், அரசு மற்றும் தனியார் பஸ்கள் கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றன. சில தனியார் பஸ்கள் போட்டி போட்டுக் கொண்டு, சர்வீஸ் ரோடு பயணத்தை தவிர்த்து, பாலத்தில் பயணிக்கின்றன. இரவு நேரங்களில் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தொலைதுார ஊர்களுக்கு செல்லும், அரசு விரைவு பஸ்கள் மேம்பாலம் கட்டாதபோது, கிணத்துக்கடவுக்குள் வந்து பயணிகளை ஏற்றி சென்றன. மேம்பாலம் கட்டிய பின், அரசு விரைவு பஸ்கள் கிணத்துக்கடவுக்குள் வருவதில்லை.இதனால், பொதுமக்கள் வெளியூர் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், ஆம்னி பஸ்களில் வெளியூர்களில் இருந்து கிணத்துக்கடவு வரும் பயணிகள், பஸ்ஸ்டாண்டில் இறக்கிவிடாமல், மேம்பாலத்தை கடந்து அரசம்பாளையம் பிரிவு பகுதியில் இறக்கிவிடுகின்றனர்.இப்பிரச்னையை தீர்க்க, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்தும், கிணத்துக்கடவுக்குள் பஸ்கள் சென்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-பிப்-202018:16:42 IST Report Abuse
Ram Pollachi வாழத் தான் விடவில்லை, வழியாவது விட்டு இருந்தால் இந்த மேம்பாலம் வந்திருக்குமா? புகை வண்டி நிலையம் பக்கத்தில் புதுப் பேருந்து நிலையம் கட்டியிருந்தால் வெளியூர் செல்ல நல்ல உதவியாக இருந்திருக்கும். வீணா போன கரை வேட்டி பின்னால் போனால் நாம் அன்னாந்து வானத்தை தான் பார்க்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X