பொது செய்தி

தமிழ்நாடு

வால்பாறையில் 'லோக் அதாலத்'

Added : பிப் 10, 2020
Advertisement

வால்பாறை:வால்பாறை நீதிமன்றத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) நடந்தது.வால்பாறை நீதிமன்றத்தில் நடந்த, தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிக்கு மாஜிஸ்திரேட் கவிதா தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் விஸ்வநாதன், முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நான்கு சிவில் வழக்குகள் முடிக்கப்பட்டன. மேலும், வால்பாறை யூனியன் வங்கியில், 9 பேர் சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவர்கள் கட்ட வேண்டிய மொத்த தொகை, ரூ.9,54,440 ஆகும். இதில், ரூ.6,73,340 தள்ளுபடி செய்யப்பட்டு, ரூ.2,81,100 வசூலிக்கப்பட்டது. இதில் உடனடி ரொக்கப்பணமாக ரூ.76,000 வசூலிக்கப்பட்டது. யூனியன் வங்கி சார்பில், தலைமைமேலாளர் விஷ்ணுதேவன், கிளை மேலாளர் நிதிஸ், துணை மேலாளர் சந்தோஷ்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X