பொது செய்தி

தமிழ்நாடு

ஹூமாயூன் மஹால் புனரமைப்பு பணி: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆய்வு

Added : பிப் 10, 2020
Advertisement
 ஹூமாயூன் மஹால் புனரமைப்பு பணி:  ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆய்வு

சென்னை:ஹூமாயூன் மஹால் கட்டடத்தை பாரம்பரிய முறையில் புனரமைக்கும் பணியை, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சென்னை, சேப்பாக்கத்தில் பழமை வாய்ந்த கட்டடங்கள் உள்ளன. இதில், தீயில் சேதமடைந்த கலச மஹால், பொதுப்பணித் துறை தலைமை அலுவலக கட்டடம் புனரமைக்கப்பட்டுள்ளன. தற்போது, 250 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹூமாயூன் மஹால் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.இதற்காக, 38 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சிமென்டிற்கு பதிலாக கட்டுமான கலவை தயாரிப்பதற்கு, சுண்ணாம்பு, கடுக்காய், தேன், தயிர், காவிரி ஆற்றுமணல் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை ஒன்றாக கலந்து, 10 நாட்கள் ஊறவைத்து கலவை தயாரித்து கட்டடம் புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இந்த கலவை தயாரிப்பதற்கு, இயந்திரம் மற்றும் செக்கு மாடுகளை பொதுப்பணித் துறை பயன்படுத்தி வருகிறது. இப்பணிகளை, அனுஜார்ஜ், சுப்ரியா சாஹு, நாகராஜன், நந்தகுமார் உள்ளிட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் உத்தரவின்படி, கட்டுமான கலவை தயாரிப்பு முறைகள் குறித்து, அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X