பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுவரியை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை

Added : பிப் 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவில், வீடுகளுக்கு விதிக்கப்பட்ட அதிக வரியினத்தை குறைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கிணத்துக்கடவு பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளது. இங்கு, 20 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மேலும், பல்வேறு குடியிருப்புகள் உருவாகி வருகிறது. ஆண்டுதோறும் வீட்டு வரி மற்றும் குடிநீர் வரிகள் வசூலிப்பது வழக்கம்.அதன்படி, இந்த ஆண்டு வீட்டு வரி வசூல் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு வீட்டு வரி இருமடங்காக உயர்த்தப்பட்டபோது, பொதுமக்கள் வரி கட்ட தயங்கினர்.அப்போது, அடுத்த ஆண்டு, வரியினம் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி, வீட்டுவரி மற்றும் குடிநீர் வரிகளை பேரூராட்சி வசூலித்தது. தற்போது, கடந்த ஆண்டு கட்டியதை விட வீட்டுவரி அதிகமாக கேட்பதாக, பொதுமக்கள் குமுறுகின்றனர்.கிராம ஊராட்சிகளிகள் இதுவரை, வீட்டுவரியினங்கள் அதிகப்படுத்தவில்லை. ஆனால், பேரூராட்சி பகுதியில், வீட்டுவரி அதிகப்படுத்தியுள்ளது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பேரூராட்சிகளுக்கு, தேர்தல் நடக்கவில்லை. எனவே, பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், வீட்டுவரி மற்றும் குடிநீர் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-பிப்-202018:06:11 IST Report Abuse
Ram Pollachi கட்டடங்களில் பயன்படுத்திய பொருளுக்கு ஏற்ப வரி விதிக்கப்படுகிறது. மாளிகை போல் பிரம்மாண்ட கட்டிடம் கூட ஆழ்துளை கிணறு, வண்டி வாகனம் அப்படியே கடன் அடைக்க இரண்டு வீடு கட்டி அதில் ஒரு வருமானம். வீடு கட்டும் போது யோசித்திருந்தால் வீதிக்கு வந்து பாட்டு பாட வேண்டிய அவசியம் இல்லை மக்களே!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X