தொழில் அதிபர்களை குறிவைத்து சூதாட்டம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழில் அதிபர்களை குறிவைத்து சூதாட்டம்

Added : பிப் 10, 2020
Share

சென்னை;வேப்பேரியில், 'ஆன்லைன்' சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
'சென்னை, வேப்பேரி அடுத்த, சூளையில், வணிக வளாகம் ஒன்றில், கிரிக்கெட் மற்றும் தங்கத்தின் விலை ஏற்றத்தை முதலீடாக வைத்து, சூதாட்டம் நடக்கிறது. அங்கு நான் பல லட்சம் ரூபாய் இழந்துவிட்டேன்.'அந்த இடத்திற்கு போலீசார் வருவதை, முன்கூட்டியே கண்டறிய, ரகசியமாக ஆட்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். சூதாட்டத்தில் ஈடுபட, 2 லட்சம் ரூபாயுடன் வர வேண்டும் என, அங்கு இருப்போர் வலியுறுத்துகின்றனர்' என, வாலிபர் ஒருவர், செப்., 13ம் தேதி, வேப்பேரி போலீசாரிடம் புகார் அளித்தார்.இதையடுத்து, தனிப்படை போலீசார், அந்த வாலிபரிடம், 2 லட்சம் ரூபாய் கொடுத்து, மீண்டும் சூதாட்டத்தில் ஈடுபட வந்திருப்பது போல நடிக்க வைத்துள்ளனர்.பின், அந்த வணிக வளாகத்திற்குள் அதிரடியாக நுழைந்து, சவுகார்பேட்டையைச் சேர்ந்த, கல்லுாரி மாணவர்கள், ராகுல் டி ஜெயின், 24; தினேஷ், 29, ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.அப்போது, மயிலாப்பூர் ஜம்புலிங்கம் தெருவைச் சேர்ந்த, ஜாய்ஷா என்பவர் தலைமையில், இந்த சூதாட்ட கிளப்பை நடத்தி வந்ததாக தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து, 53 லட்சம் ரூபாய் ரொக்கம், மொபைல் போன்கள், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாய்ஷா, 22, என்பவரை, நேற்று கைது செய்தனர்
.போலீசாரிடம் ஜாய்ஷா அளித்துள்ள வாக்குமூலம்:நுங்கம்பாக்கத்தில், ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறேன். அங்கு, 'ஹூக்கா' எனும் போதை பொருள் புகைக்கும், 'பார்' உள்ளது. இந்த போதைக்காக, தினமும், தங்கம், வைர நகைகள் விற்பனை செய்யும் இளம் தொழில் அதிபர்கள், 100க்கும் மேற்பட்டோர் வருவர்.அவர்களை குறிவைத்து, கிரிக்கெட் மற்றும் தங்கத்தின் விலை ஏற்றத்தை முதலீடாக வைத்து சூதாட்ட கிளப்பை நடத்தி வந்தேன். சூதாட்டம் அனைத்தும், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே நடத்தி வந்தேன். இதில், பல கோடி ரூபாய் சுருட்டியுள்ளேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X