குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம்...

Added : பிப் 10, 2020
Advertisement

அடிப்படை வசதியின்றி தவிப்பு

சாத்துார் ஒன்றியம் உப்பத்துாரில் தெருவிளக்கு, சுகாதார வளாகம், ரோடு போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. பொதுமக்கள் குடிநீருக்காக பக்கத்து கிராமங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. ஊராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எட்வின், உப்பத்துார்.

தெருக்களில் ஓடும் கழிவுநீர்

திருச்சுழி ஒன்றியம் வாகைக்குளம் ஊராட்சி புரசலுாரில் வாறுகால் வசதி இல்லாததால் தெருக்களில் முழுவதும் கழிவுநீர் ஓடும் அவலம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நடமாட முடியாமலும், பாதையை பயன்படுத்த முடியாமலும் சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குகன், வாகைக்குளம்..

எதுவுமே இல்லீங்க

திருச்சுழி ஒன்றியம், பண்ணை மூன்றடைப்பு கிராமத்தில் தெருவிளக்கு, குடிநீர் போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெற்றி, பண்ணை மூன்றடைப்பு.

துர்நாற்றம் தரும் குப்பை

விருதுநகர் ஒன்றியம் ரோசல்பட்டி ஊராட்சி பாண்டியன்நகரில் ரோட்டோரம் குப்பை குவிந்து கிடக்கிறது. சாரல் மழைக்கே அப்பகுதியில் துர்நாற்றம் அடிக்க துவங்கி உள்ளது. ரோட்டை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். தெருநாய்களும் குப்பையை கிளறி அப்பகுதியை அசுத்தம் செய்கின்றன.

-ராமலிங்கம், பாண்டியன்நகர்.

அகற்றப்படாத குப்பை

விருதுநகர் ஒன்றியம் சிவஞானம் ஊராட்சி பெத்தனாட்சி நகரில் குப்பை குவிந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு அதிகரித்து பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குப்பையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரன், பெத்தனாட்சி நகர்.

வாறுகால் வசதி இல்லை

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 5 வது வார்டு வீராச்சாமி தெருவில் வாறுகால் வசதி இல்லை. மழைக்காலங்களில் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. மிகவும் சிரமமாக
உள்ளது. கடந்த வாரம் பெய்த கோடை மழைக்கே குடியிருப்புகளுக்குள் மழைநீர் வந்துவிட்டது. வாறுகாலை ஏற்படுத்தி கழிவுநீர், மழைநீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.

-பாக்கியம், விருதுநகர்

மட்டமான ரோடு

அருப்புக்கோட்டை பந்தல்குடியில் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக ஊராட்சியில் பலமுறை புகார் அளிக்கப்பட்டு
உள்ளது. எவ்வித நடவடிக்கையும் இல்லை.

-ராஜ்குமார், பந்தல்குடி.

சுடுகாடு இல்லை

விருதுநகர் ஒன்றியம் ரோசல்பட்டி ஊராட்சியில் சுடுகாடு முறையாக செயல்படுவதில்லை. இதனால் அங்கு இறந்த பிணங்களை விருதுநகர் நகராட்சிக்கு சொந்தமான புல்லலக்கோட்டை சுடுகாட்டுக்கு எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ரோசல்பட்டியில் இருந்து புல்லலக்கோட்டை ரோடு அதிக துாரம் என்பதால் ரோசல்பட்டி சுடுகாட்டை விரைவில் செயல்படுத்த ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில்குமார், விருதுநகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X