பொது செய்தி

தமிழ்நாடு

பழநி பாதயாத்ரீகர்களுக்கு மருத்துவ சேவை முகாம்

Added : பிப் 10, 2020
Advertisement

பொள்ளாச்சி;பழநி மலைக்கு, தைப்பூச விழாவை முன்னிட்டு முருகனை தரிசனம் செய்ய, பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.பெரும்பாலானவர்கள், தைப்பூசத்தன்று தங்கள் ஊர்களில் பாத யாத்திரையை தொடங்குகின்றனர். கடந்த, 8ம் தேதி தைப்பூச விழா கொண்டாடப்பட்ட நிலையில், பல்வேறு ஊர்களில் இருந்தும் பொள்ளாச்சி வழியே இரவு, பகலாக லட்சக்கணக்கான பக்தர்கள், பழநி நோக்கி நடந்து செல்கின்றனர். தொலைதுார ஊர்களில் இருந்து நடந்து வரும் யாத்திரீகர்கள், தொடர்ச்சியான நடை பயணத்தால், உடல் உபாதைகள், பலவீனத்துக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில், பொதுமக்கள் சார்பில், பொள்ளாச்சி நெடுஞ்சாலை பகுதிகளில் சேவை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.கோவை ரோடு, ஆச்சிப்படி ஆஞ்சநேயர் கோவில் முன்பு, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன் சேவா டிரஸ்ட் சார்பில் மூன்றாவது ஆண்டாக, சேவை முகாம் அமைக்கப்பட்டது. அங்கு, பாதை யாத்திரை பக்தர்களின் கால்களுக்கு மருந்து தடவி சேவை செய்யப்பட்டது. மேலும், அன்னதானம் வழங்கியதுடன், மூலிகை குடிநீர், நீர்மோர், காய்ச்சல், வலிமருந்துகள், களிம்புகளும் வழங்கப்பட்டன.ஆயிரக்கணக்கான பக்தர்கள், இங்கு கால்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டும், இளைப்பாறியும், உற்சாகம் பெற்று பயணத்தை தொடர்ந்தனர்.இதேபோல், பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு என பக்தர்கள் நடைபயணம் மேற்கொள்ளும் பகுதிகளில், பல்வேறு சேவை முகாம்கள் அமைத்து, உதவிகள் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X