பொது செய்தி

தமிழ்நாடு

சென்ட்ரல் மெட்ரோவில் பரிசளிப்பு விழா

Added : பிப் 10, 2020
Share
Advertisement
 சென்ட்ரல் மெட்ரோவில் பரிசளிப்பு விழா

சென்னை:ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசளிப்பு விழா, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், நேற்று நடந்தது.
மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை கலைப்பள்ளியுடன் இணைந்து, கடந்த, 2ம் தேதி, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு ஓவியப் போட்டி நடத்தின.சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, வடபழனி, ஆயிரம் விளக்கு, அரசினர் தோட்டம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை உட்பட, 15 மெட்ரோ நிலையங்களில் நடத்தப்பட்ட போட்டியில், 1,100 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.இதில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையும்; நான்கு முதல் ஆறாம் வகுப்பு வரையும்; ஏழு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையும்; 10 முதல், பிளஸ் 2 வரையும், தனித் தனி பிரிவாக போட்டிகள் நடந்தன. கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, தனியாக போட்டி நடத்தப்பட்டது.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பரிசளிப்பு விழா, சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் நேற்று நடந்தது. இதில், சென்னை மெட்ரோ நிறுவன நிதி பிரிவு பொது மேலாளர் முரளி தலைமை வகித்து, போட்டியில், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, நற்சான்றிதழ், பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X