திறக்கப்படாத சுகாதார வளாகம்; அள்ளப்படாத குப்பை

Added : பிப் 10, 2020
Advertisement

விருதுநகர்:செயல்படாத சுகாதார வளாகம், துார்வாரப்படாத வாறுகால், இடமாற்றப்பட்ட
அங்கன்வாடி மையம், கொசுத்தொல்லை என எண்ணற்ற சிரமங்களால் விருதுநகர் கிழக்கு பாண்டியன் காலனி மக்கள் கிறுகிறுத்து போய் உள்ளனர்.

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் கிழக்கு பாண்டியன் காலனி அமைந்துள்ளது.
இப்பகுதியில் துப்பரவு ஊழியர்கள் குப்பையை வாங்க வருவதில்லை. இதனால் பொதுமக்கள் குப்பையை கொட்ட வழியின்றி திணறுகின்றனர். வாறுகால் ஒரு மாதமாக துார்வாரப்
படாததால், அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. 2003ல் கட்டப்பட்ட பொது
சுகாதார வளாகம் தரமாக கட்டப்படாததால் மேற்கூரைகள் இடிந்தது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் அந்த சுகாதார வளாகத்தை பூட்டிவிட்டது. தற்போது வரை திறக்கவில்லை.

நகராட்சி பகுதியில் இருந்த அங்கன்வாடி மையம், தற்போது ஊராட்சி பகுதியில் வாடகைக்கு இயங்கி வருகிறது. சிறிய அளவிலான வீட்டில் வைத்து அங்கன்வாடி செயல்படுவதால்
குழந்தைகளை படிக்க சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் கவுசிகா நதிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் குப்பை தேங்கி கழிவு நீர் ஓடையாக காட்சி அளிக்கிறது. நகராட்சி நிர்வாகம் இப்பகுதியினருக்கு அடிப்படை வசதிகள் எதையுமே பூர்த்தி செய்து தரவில்லை. இப்பகுதி மக்கள் தினசரி சிரமத்தில் தவிக்கின்றனர்.

ஆக்கிரமிப்பால் அல்லல்

நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் ரோட்டை ஒட்டியுள்ள முன்பகுதியை பொதுமக்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட வேண்டியுள்ளது. சுகாதார வளாகம் செயல்படாததால் முதியவர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். நகராட்சியின் இந்த செயல்பாடு திறந்தவெளியை ஊக்குவிக்கிறதோ என சந்தேகத்தை எழுப்புகிறது.

-காளிதாஸ், வல்கனைசிங்,

கிழக்கு பாண்டியன் காலனி.

நானே வாறுகால் அள்ளினேன்

துப்பரவு ஊழியர்கள் வாறுகாலை அள்ளுவதே இல்லை. காலை நான் என் வீட்டின் முன்னால் உள்ள வாறுகாலை சுத்தம் செய்தேன். நாங்கள் போதிய குப்பை வரி செலுத்தியும் குப்பை கொட்ட வழியின்றி திணறி வருகிறோம். மக்களின் தேவையை பூர்த்தி செய்யாத நகராட்சி
நிர்வாகத்தின் செயல்பாடு கோபத்தை தருகிறது.

-எம்.சுரேஷ், வல்கனைசிங்,

கிழக்கு பாண்டியன் காலனி.

கொசுத்தொல்லை தாங்கல

வாறுகால் அள்ளப்படாததால் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகரித்து கொண்டே
வருகிறது. கர்ப்பிணிகள், முதியவர்கள், சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் வாறுகாலை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு, பகலாக வீசும் துர்நாற்றத்தால் வீட்டில் இருக்க முடிவதில்லை.

-ரவிகண்ணன், டிரைவர்,

கிழக்கு பாண்டியன் காலனி.

இங்க மட்டும் வர்றதில்ல

கவுசிகா நதிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் குப்பை தேங்கி கழிவுநீர் ஓடையாக காட்சி அளிக்கிறது. அதை சுத்தப்படுத்தவும், ஓடையோரம் குவியும் குப்பையை அகற்றவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் குப்பை வாங்குபவர்கள் ஏன் எங்கள் பகுதிக்கு குப்பை வாங்க வருவதில்லை.

-மாரிக்கனி, டிரைவர்,

கிழக்கு பாண்டியன் காலனி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X