பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' வைரஸ்: நால்வரும், 'டிஸ்சார்ஜ்'

Added : பிப் 10, 2020
Advertisement

சென்னை:ஸ்டான்லி மருத்துவமனையில், கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாக அனுமதிக்கப்பட்ட, மருத்துவ கல்லுாரி மாணவி, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாக, 4ம் தேதி, சீனாவைச் சேர்ந்த கோவி, 34, ஜோ ஜின், 26, சென்னை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சவுந்தர்யா, 19, லாவண்யா, 24, ஆகிய நால்வரும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இதில், சீனா, யுவான் மாகாணத்தில் உள்ள மருத்துவ கல்லுாரியில், லாவண்யா, சவுந்தர்யா ஆகியோர் மருத்துவம் படித்து வந்துள்ளனர்.கோவி, ஜோ ஜின் ஆகியோர், தொழில்முறை பயணமாக சென்னை வந்துள்ளனர். நால்வரும், கொரோனா வைரஸ், சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர்.இதில் கோவி, ஜோ ஜின் ஆகியோருக்கு, கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என, பரிசோதனை முடிவுகள் வந்ததையடுத்து, இருவரும், 8ம் தேதி, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.தொடர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ கல்லுாரி மாணவியருக்கும், பரிசோதனை முடிந்து, கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என, தெரிய வந்துள்ளது.அதன்படி, சவுந்தர்யா, நேற்று, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். லாவண்யா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என, மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X